| நன்னூல் விருத்தியுரை | மகளிர்க்கே கைவிளக் காகி” (நன். 456* மயிலை.) என்பது அச்சம். “கடிமலர் மிசைபூத்துக் கம்புளோ டன்ன மார்க்கும்” (நன். 456 மயிலை.) என்பது சிறப்பு. “எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மின்” (புறம். 9:5) என்பது விரைவு. “கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்” (குறுந். 105:2) என்பது மிகுதி. இது புதிதுண் கடவுள் என்றும் ஆம். “கடிமுரசு” (வி. மே.) என்பது ஆர்த்தல். “கடித்துக் கரும்பினைக் கண்டகர நூறி” (நாலடி. 156:1) என்பது வரைவு. “கடிவினை முடிகென” (நன். 456* மயிலை.) என்பது மன்றல். “கடிமிளகு தின்ற கல்லா மந்தி” (தொல். உரி. 87 இளம்.) என்பது கரிப்பு. (16) | | ஒரு குணம் தழுவி வரும் உரிச்சொற்கள் சில | | {458} | மாற்ற நுவற்சிசெப் புரைகரை நொடியிசை கூற்றுப் புகறன் மொழிகிளவி விளம்பறை பாட்டுப் பகர்ச்சி யியம்பல் சொல்லே. | எ-னின், இதுவும் ஒரு குணம் தழுவிய உரிச்சொல்லுள் சில உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மாற்றம் முதல் இயம்பல் ஈறாகக் கூறிய பதினாறும் சொல் என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாம் எ-று. “சால வுறுதவ” (நூ. 456) என்பதனைச்446 சார வையாது ஈண்டுக் கூறினார் இவை ஒலிப்பண்பை உணர்த்தி ஏனைப் பெயர்வினைகளை ஒருவாது நடத்தலின் அத்துணைச் சிறப்பினவன்றி ஒரோவழி ஒருவியும் நடக்கும் என்பது தோன்றற்கு என்க. வ-று: “கோவ லர்வாய், மாற்ற முணர்ந்து” (சீவக. 432:1-2), “இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல” (முருகு. 182), “தெருண்டாரவை செப்ப லுற்றேன்” (சீவக. 6:4), “உரைப்பா ருரைப்பவை யெல்லாம்” (குறள். 232), “அறங்கரை நாவி னான்மறை முற்றிய” (தொல். சிற. பாயி. 10), “அஞ்சொற் பெரும்பணைத்தோ ளாயிழையா டானொடியும்” (பு.வெ. 335:1*), “நசையுநர்க் கடையா நன்பெரு வாயில் இசையெனப் புக்கு” (பொருந. 66-67*), “உற்றது நாங்கள் கூற வுணர்ந்தனை” (நன். 457* மயிலை.), “புகன்ற வன்றியும் புறமிக ----------------------------------- 446“சால வுறுதவ... ... என்பது தோன்றற்கு என்க.” என்னும் இவ்வுரைப் பகுதி பல பதிப்புகளில் இடம் மாறியுள்ளது. | |
|
|