| நன்னூல் விருத்தியுரை | வருமே” (நன். 457 மயிலை.), “காமஞ் செப்பாது கண்டது மொழிமோ” (குறுந். 2:2), “கிளக்குங் கிளவி பாண கேளினி” (புறம். 155:3*), “மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர்” (நன். 63), “அறிவன தடிதொழு தறைகுவ னெண்ணே” (வி. மே.), “ஒருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டின்றே” (புறம். 34:5-7*), “வார்த்தை பகர்குற்றேன்” (நன். 457 மயிலை.), “இடிபோல வியம்பி னானே” (சீவக. 432:4) என முறையே காண்க. (17) | | 459. | முழக்கிரட் டொலிகலி யிசைதுவை பிளிறிரை இரக்கழுங் கியம்ப லிமிழ்குளி றதிர்குரை கனைசிலை சும்மை கௌவை* கம்பலை அரவ மார்ப்போ டின்னன வோசை. | எ-னின்447 இதுவும் அது. இ-ள்: முழக்கு முதலிய இருபத்திரண்டும் இவை போல்வன பிறவும் ஓசை என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாம் எ-று. வ-று: “முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ” (புறம். 18:1), “குடிஞை யிரட்டுங் கோடுயர் நெடுவரை” (நன். 458 மயிலை.), “ஒல்லென் றொலிக்கு மொலிபுன லூரற்கு” (ஐந். ஐம். 28:1*), “கலிகெழு மூதூர்” (புறம். 52:12*), “பறையிசை யருவி” (புறம். 126:8), “தோல், துவைத்து” (புறம். 4:5*), “பிளிறுவா ரிடிமுரசம்” (சீவக. 1617:3*), “இரைக்கு மஞ்சிறைப் பறவைகள்” (சூளா. 877:1), “இரங்கு முரசின்” (புறம். 137:1), “இரும்பிழி மாரி யழுங்கன் மூதூர்” (அகம். 122:1*), “காலை முரசங் கனைகுர லியம்பும்” (சிலப். 17. 1:6), “இமிழ்-கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை” (புறம். 19:1), “குளிறு முரசங் குணில்பாய” (பு. வெ. 48:1), “களிறுங் களித்ததிருங் கார்” (பு. வெ. 37:4), “குரைபுனற் கன்னி” (சீவக. 39:4), “கனைகடற் றண்சேர்ப்ப” (நாலடி. 138:1), “சிலைத்தார் முரசங் கறங்க” (புறம். 36:12), “தள்ளாத சும்மை மிகுதக்கண நாடு நண்ணி” (சீவக. 20:1*), “கௌவைநீர் வேலி” (பு. வெ. 83:1*), “வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்” (யா. வி. 15), “அறைகழ லரவத் தானை” (சூளா. 680:1*), “ஆர்த்தபல்லி யக்குழாம்” (சூளா. 475:1) என முறையே காண்க.(18) -------------------------------- 447“கவ்வை” என்பது சங்கர நமச்சிவாயர் பாடம். | |
|
|