நன்னூல் விருத்தியுரை | சொல்லதிகார நூற்பாக்களின் தொகையும் பொருளடைவும் | | பேரறு பத்திரண்டு பின்வினையெண் ணான்குபொது450 ஓரறுபத் தெட்டிடை மூவேழின் - மேலொன் றுரியிருபத் தொன்றாகச் சொற்சூத் திரத்தின் விரியிருநூற் றோரைந்தா வேண்டு. இருதிணை மூவிட நான்மொழி யைம்பா லறுதொகையேழ் அருவழு வெட்டுரு பொன்பான் றொகாநிலை யாய்ந்தவெச்சம் ஒருபது கோளெட்டு முப்பொழு தீரிட மோரியல்பாய் வருமொழி மூன்று முணரச்சொல் வண்மை வருந்திருவே. | ------------------------------- 450சொல்லதிகாரத்தின் இயல் வைப்புமுறையைப், ‘பேர், வினை, பொது, இடை, உரி’ என்று இவ்வெண்பா சுட்டுவது நோக்கத் தக்கது. | |
|
|