பக்கம் எண் : 548
  

இடம் விளங்காத மேற்கோள்கள்
(எண்கள்: நன்னூல் நூற்பாக்களின் எண்கள்)
 

அங்ங் கனிந்த வருளிடத்தார்க் கன்புசெய்து
நங்ங் களங்கறுப்பா நாம் (நூ. 92)

அதுமற் றம்ம (நூ. 420; 438)

அவர்வயிற் செல்லாய் (நூ. 302)

அறிவன தடிதொழு தறைகுவ னெண்ணே (நூ. 458)

இடக்க ரென்பது மறைத்துமொழி கிளவி (நூ. 267)

இரப்பவ ரென்பெறினுங் கொள்வர் (நூ. 295, 317)

இலங்ங்கு வெண்பிறைசூ டீசனடி யார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமிலை காண் (நூ. 92)

எங்ங் கிறைவனுள னென்பாய் மனனேயான்
எங்ங் கெனத்திரிவா ரின் (நூ. 92)

எந்தை யெமக்கருளுமன் (நூ. 432)

கடிமுரசு (நூ. 457)

கருதலர்ச் சீறிய கடுங்கொல் யானை (நூ. 356)

கேள்வி விமரிசம் பாவனை (சிற. பாயி.)

சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும்
சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனும்
சங்கப் புலவருந் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநா டென்ப (நூ. 271)

சார்வுழிச் சார்ந்த தகையள் (நூ. 163)

சூருயிர்க் குடித்த (நூ. 232)