பக்கம் எண் : 549
  

இடம் விளங்காத மேற்கோள்கள்
 

சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும்
நின்றதுகொ னேர்மருங்கிற் கையூன்றி - முன்றின்
முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்
குழந்துபின் சென்றவென் னெஞ்சு (நூ. 269)

தரும் வளவன் (நூ. 96)

திகழ்செவ் வான்மதித் திருமுகப் பூங்குழல் (நூ. 369)

தேர்த்திசை யிருந்தான் (நூ. 302)

நன்னிதி பெறுக நாடொறும் வாழ்கவென்
றுன்னுமிவ் வேட்கை யொழிந்தன ரிலரே (நூ. 430)

நெடியன்மன் (நூ. 432)

பகையியல் பாயிலி படைக்கை மறவன் (நூ. 397)

பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத்
தொகுதி யாகச் சொல்லுத றானே (நூ. 1)

புறங்கொடை யறியா மறந்திகழ் வேலோன் (நூ. 290)

மடங்ங் கலந்த மனனே களத்து
விடங்ங் கலந்தானை வேண்டு (நூ. 92)

மண்புகுந்தும் விண்பறந்து மாலுமய
னுங்காணா வொருபொருள் (நூ. 257)

மருவினென் செய்யுமோ நிலவு (நூ. 172)

மூவிலைய வேல் (நூ. 340)