பக்கம் எண் : 551
  

இலக்கணக் கலைச்சொற்கள்
 

போன்ற கலைச்சொற்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். ஆகவே அடைப்புக்குறிக்குள்
தரப்பட்டுள்ள சொற்கள் நூற்பாவில் வந்துள்ளவை அல்ல என்பதை நினைவுகூர்தல் 
நல்லது.

     கலைச்சொல் என்பதைத் தெளிவாக விளக்கி வரையறை செய்து, தமிழிலக்கண
நூல்களிலும் உரைகளிலும் தொன்றுதொட்டு வழங்கிவரும் கலைச்சொற்கள்
அனைத்திற்கும் இலக்கண அகராதி ஒன்று உருவாகும் போது இத்தொகுப்பில்     
தரப்பட்டுள்ள சில சொற்கள் தள்ளப்படலாம். உதாரணமாக அழைப்பது, இருவழி, 
ஒருத்தி, ஒருவன், ஒன்று, குறியது, சாதல், செய்தது, செலவு, பல, பலர், வரவு,
வினையெஞ்சு போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். நன்னூல் விருத்தியைக்           
கற்பவர்களுக்கு உதவும் நோக்கத்தில், உரையைத் தழுவி, இத்தொகுப்பில் அவையும்
கொடுக்கப்பட்டுள்ளன. இலக்கணம் என்று சொன்னால் நம் மனக்கண்ணில் தோன்றுவது
மூலமும் உரையும் கொண்ட ஒரு தொகுதியே. அதனால் இலக்கணக்           
கலைச்சொற்களோடு உடன்படல், குன்றக் கூறல், சுருங்கச் சொல்லல், செய்வித்தோன்,
நுதலிப் புகுதல் போன்ற உரைமரபுத் தொடர்களும் அயல் நீடல், ஆதி நீடல், இறுதி
அழிவு, ஈறு போதல் போன்ற இலக்கணச் செய்கைகளைக் குறிக்கும் தொடர்களும்  
இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் உள்ளடக்கி, மிகுதி பற்றிய
வழக்காக இலக்கணக் கலைச்சொற்கள் என்னும் குறியீடு இதற்குத் தரப்பட்டுள்ளது.
இச்சொற்களுக்கு நூலிலும் உரையிலும் விளக்கம் அமைந்திருப்பதால் அவற்றுக்கு
மீண்டும் பொருள் எழுதும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.
 
அஃகிய இ   
(அஃகிய) உ
(அஃகிய) ஐ
(அஃகிய) ஒள
(அஃகிய) தனிநிலை
(அஃகிய) மஃகான்
(அஃகும்) ஆய்தம்
அஃகும் இ
(அஃகும்) உகரம்
(அஃகும்) ஐகான்
(அஃகும்) ஒளகான்
60.
60.
60.
60.
60.
60.
61.
61.
61.
61.
61.