| பதிப்புரை | ஒன்று ஆழ்வார் திருநகரியிலிருந்து கிடைத்ததும் சாமிநாதையர் (1925. முகவுரை பக். 5) அதைப் பதிப்பிக்கலானார். சாமிநாதையர் சங்கர நமச்சிவாயர் உரையேட்டை முதன் முதலாகப் பார்த்த போது அவருக்கு வயது இருபத்தொன்று. அவர் அதைப் பதிப்பித்த போது அவருக்கு வயது எழுபது; அதன் இரண்டாவது பதிப்பு வெளிவந்தபோது அவருக்கு எண்பது வயது நிறைந்துவிட்டது. இப்பதிப்பின் சிறப்பியல்புகளை எடுத்துச் சொல்ல இந்த நெடிய வரலாறே போதுமானது. இவ்வாறு பல ஆண்டுகளாக நன்னூலைப் பலவாறு படித்து ஆராய்ந்து வைத்திருந்ததால் அவர் பதிப்புகளில் சங்கர நமச்சிவாயர் உரை ஒரு மகுடமாகத் திகழ்கிறது. முகப்புத் தாள் முதல் பிழை திருத்தம் முடிய இப்பதிப்பின் பகுதிகள் ஒவ்வொன்றிலும் சாமிநாதையரின் முத்திரையைக் காண முடிகிறது; அவருடைய சலியா உழைப்பை உணர முடிகிறது. இப்பதிப்புக்கு அவர் எழுதியுள்ள முகவுரை, நூற்பெருமை, பவணந்தி முனிவர், சீயகங்கன், சங்கர நமச்சிவாயர் ஆகியோரின் வரலாறுகள் முதலிய எல்லாம் தகவல் கருவூலங்கள். மூலமும் உரையும் கொண்ட நூலின் கருவறைப் பகுதி கவினுற அமைந்துள்ளது. நூற்பாவின் தலைப்பு, நூற்பா, உரை, ஒப்பீட்டுக் குறிப்பு, சுருக்கக் குறியீடு, நிறுத்தல் குறிகள், பத்திப் பிரிப்பு, மேற்கோள்களின் இடவிளக்கம், பாட வேறுபாடுகள் ஆகிய எல்லாவற்றிலும் சாமிநாதையரின் பதிப்புத் திறன் பளிச்சிடுகிறது. நூலின் இறுதியில் அமைந்துள்ள அரும்பத அகராதி, விளங்கா மேற்கோள் அகராதி, குறிப்புரை முதலிய பின்னிணைப்புகளின் பயன் அளவிட முடியாதது. அமைப்பிலும் உள்ளுறையிலும் முதல் பதிப்பை விடவும் இரண்டாம் பதிப்பு (1935) திருத்தம்87 பெற்றுள்ளது. சுருங்கச் சொன்னால் 1935-க்குப் பிறகு தமிழில் வெளிவந்த, தரமான இலக்கணப் பதிப்புகள் எல்லாவற்றிலும் சங்கர நமச்சிவாயர் உரைப் பதிப்பின் தாக்கம் உண்டு; இனி வரும் பதிப்புகளிலும் அது இருக்கும்; இருக்கவும் வேண்டும். அதன் மூலம் தமிழ்ப் பதிப்புக் கலை தழைக்கும்; அந்தத் தவப் புதல்வரின் தன்னிகரற்ற தமிழ்த் தொண்டு வருங்காலச் சந்ததியினர்க்கும் விளங்கும். | | ஆறுமுக நாவலர் பதிப்பு | சிவஞான முனிவர் திருத்திய புத்தம் புத்துரைக்கு இதுவரை வெளிவந்துள்ள ஐந்து பதிப்புகளில் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அச்சிட்டதே முதல் பதிப்பு. ஆறுமுக நாவலர் தமிழ்ப் பதிப்புக் கலைக்கு அடிக்கல் நாட்டிய பிதாமகன். ஏட்டுச் சுவடிகளை ஒப்பிட்டுப் பரிசோதித்துப் பழுதறப் பதிப்பிப்பதில் அவருக்கு இணை ----------------------------- 87கி. நாச்சிமுத்து (1986. பக். 84-90) இத்திருத்தங்களை வகைப்படுத்திக் காட்டுவார். | |
|
|