| பதிப்புரை | நமச்சிவாயர உரைப் பதிப்புகளில் இப்பிழை100 நிலைத்துவிட்டது. சாமிநாதையரின் பிந்திய பதிப்பைப் பார்த்து இந்த இடவிளக்கத்தைத் தண்டபாணி தேசிகர் எழுதினார்; தேசிகர் பதிப்பைப் பார்த்து இளவரசு எழுதினார்; இவ்வாறு ஒரு பதிப்பிலிருந்து மற்றொரு பதிப்புக்கு இப்பிழை குடியேறிவிட்டது. பிழைகள் ஒரு பதிப்பிலிருந்து மற்றொரு பதிப்புக்கு இவ்வாறு ஊடுருவி நிலைபெறுதற்கு இன்னொரு உதாரணமும் காட்டலாம். குறிப்பு வினைமுற்று அடுக்கி ஒரு பெயரோடு முடிதற்கு மயிலைநாதர் (நூ. 354), | | | “இளையண் மெல்லியண் மடந்தை அரிய சேய பெருங்கான் யாறே” | என்ற அடிகளை எடுத்துக்காட்டுவார். அவர் காட்டிய இந்த உதாரணத்தையே சங்கர நமச்சிவாயரும் (நூ. 355) தம்முடைய உரையில் தழுவிக்கொள்வார். “எம்மூரல்லது” என்ற பாடலின் அடிகள் என்று மயிலைநாதர் உரையில் (1918. பக். 228) இந்த உதாரணத்துக்குச் சாமிநாதையர் சரியாக இடவிளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் அதே உதாரணத்துக்குச் சங்கர நமச்சிவாயர் உரையில் (1925. பக். 189; 1935. பக். 318) அவர் கொடுத்துள்ள இடவிளக்கம் தெளிவாக அமையவில்லை. இந்த ஈரடி உதாரணம், “எம்மூ ரல்லது” என்று தொடங்கும் ஐங்குறுநூற்றுத் தனிப் பாடலின் இறுதிப் பகுதி. ஒரே பாடலில் அமைந்துள்ள இந்த இரண்டு அடிகளையும் சாமிநாதையர் இரண்டு உதாரணங்களாகக் கருதித், தனித்தனியாகக் குறியிட்டு, அவற்றுள் முதலடிக்கே, “எம்மூரல்லது” என்னும் செய்யுளில் உள்ளது என்று இடவிளக்கம் கொடுத்துள்ளார். இரண்டாவது அடியை அவர் இடம் விளங்கா மேற்கோள் என்று (1925. பக். 290; 1935. பக். 447) தவறாகக் குறித்துள்ளார். சங்கர நமச்சிவாயர் உரையைப் பதிப்பிப்பதற்கு முன்பே சாமிநாதையர் ஐங்குறுநூற்றுக்கு இரண்டு பதிப்புகளை (1903, 1920) வெளியிட்டுவிட்டார். இருந்தாலும் இந்த மேற்கோள் பாடலைப் பொறுத்த வரையில் அவருக்கு எப்படியோ தடுமாற்றம் நிகழ்ந்துவிட்டது. அதனால் ஐங்குறுநூறு, சங்கர நமச்சிவாயர் உரை ஆகிய இரண்டு ------------------------- 100இதுபோலவே, “படுமகன் கிடக்கை காணூஉ” என்னும் புறநானூற்றுத் தொடரின் (278:8) மேற்கோள் இடவிளக்கத்தில் நிகழ்ந்துள்ள பிழையும் (சாமிநாதையர், 1925. பக். 39) ஐந்தாவது பதிப்பு (1991. பக். 57) வரை நிலைத்துவிட்டது. இப்பிழையோடு இதனைப் பலரும் (தண்டபாணி தேசிகர், 1957. பக். 89; க. ப அறவாணன், 1977. பக். 142) மேற்கோள் காட்டுவார்கள். | |
|
|