| பதிப்புரை | ஆறுமுக நாவலர், தண்டபாணி தேசிகர், சாமிநாதையர் ஆகியோர் ஆராய்ந்து வெளியிட்ட நன்னூல் விருத்தியுரை, சங்கர நமச்சிவாயர் உரை ஆகியவற்றின் முதல் பதிப்புகள் இப்பதிப்புக்குத் துணைமை ஆதாரங்கள். உரைப்பாடங்களை ஒப்பிட்டு ஆராய்வதற்குப் பிற பழைய பதிப்புகளும் ஓரளவு உதவின. அவற்றின் நூலடைவுக் குறிப்புகளைத் துணை புரிந்த நூல்கள் என்ற பகுதியில் காணலாம். ஆகவே இது ஒரு செம்பதிப்பு; கடிதப்பிரதியை அச்சுப் படிகளோடு ஒப்புநோக்கி ஆராய்ந்து பதிப்பிக்கப்பட்டுள்ளது; சங்கர நமச்சிவாயர் உரையில் சிவஞான முனிவர் செய்த திருத்தங்களைக் குறியீடுகளாலும் எழுத்தின் அளவாலும் வேறுபடுத்தி அறியுமாறு105 தெளிவாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நன்னூல் கூழங்கைத் தம்பிரான் உரையை நான் மீண்டும் செப்பமாகப் பதிப்பிக்க எண்ணியிருந்த சமயத்தில் நண்பர் பா. ரா. சுப்பிரமணியன் இந்தக் கையெழுத்துப் பிரதியை வழங்கி என்னை இந்தப் பணியில் ஈடுபடுத்தினார். அவருடைய எண்ணம் ஈடேறியுள்ளதாக நம்புகிறேன். ஆறுமுக நாவலர், சாமிநாதையர், தண்டபாணி தேசிகர் ஆகியோர் நன்னூல் விருத்தியுரைக்கு வெளியிட்ட பதிப்புகளைப் போல, அவர்கள் தொட்டுக் காட்டிய பதிப்பு முறைகளைக் கடைப்பிடித்து, நன்னூல் விருத்தியுரைக்குச் செம்பதிப்பு ஒன்றை வெளியிடுவதே என் முக்கியக் குறிக்கோள். அதோடு அவர்களுடைய பதிப்புகளில் தற்செயலாக விழுந்துவிட்ட ஓரிரு பிழை விதைகளிலிருந்து வளர்ந்துள்ள தப்புச் செடிகளைக் களையவும் முயன்றுள்ளேன். அறிவாற்றலும் செயல்திறனும் தலைமுறைதோறும் வளரக் கூடியன. “தம்மின்தம் மக்கள் அறிவுடைமை” என்று வள்ளுவம் உணர்த்துவதும் இதுவே. அதனால் மூலம், உரை, உதாரணம், மேற்கோள் என்னும் அகப்பகுதிகளும் பதிப்புரை, அடிக்குறிப்புகள், இலக்கணக் கலைச்சொற்கள் முதலிய புறப்பகுதிகளும் முன்னைய பதிப்புகளை விடவும் இப்பதிப்பில் சிறப்பாக ஆராயப்பட்டுள்ளன. பிற பதிப்புகளோடு இப்பதிப்பின் ஏதாவது ஒரு பகுதியை ஒப்பிட்டாலும் இதன் சிறப்பியல்புகளை உணர முடியும். என்றாலும் சிலவற்றை எடுத்துக்காட்டுவது நல்லது. | | பதிப்புத் தகவல்கள் | உரையோடு ஒரு நூலைப் பதிப்பிப்பவர் அந்நூலுக்கு எழுந்த மற்ற உரைகள், அவற்றுக்கு வெளிவந்த முந்தைய பதிப்புகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைத் ---------------------------- 105‘குறியீடுகளை அறிய உதவும் குறிப்புகள்’ என்னும் பகுதியில் கொடுத்துள்ள முதல் மூன்று குறிப்புகளில் உரையையும் திருத்தப் பகுதிகளையும் வேறுபடுத்தியுள்ள முறை விளக்கப்பட்டுள்ளது. சிவஞான முனிவர் செய்த திருத்தங்கள்: ஒரு கண்ணோட்டம் என்ற பின்னிணைப்பிலும் இத்திருத்தப் பகுதிகள் தொகுத்துச் சுட்டப்பட்டுள்ளன. | |
|
|