| பதிப்புரை | தெரிவிப்பது கடமை. அதனால்தான் சாமிநாதையர், தண்டபாணி தேசிகர் போன்றோர் தங்கள் முகவுரைகளில் பதிப்புத் தகவல்களைக் கொடுத்துள்ளனர். ஆனால் அவற்றை அவர்கள் முழுமையாகக் கொடுத்துள்ளதாகச் சொல்ல முடியாது. காட்டாக நன்னூல் விருத்தியுரையைப் பற்றி, “இவ்வுரையைப் புத்தம் புத்துரை எனவும் வழங்குவர். இஃது அச்சிடப்பட்டுள்ளது.” என்றும் விசாகப்பெருமாளையர் காண்டிகையைப் பற்றித், “திருத்தணிகை விசாகப்பெருமாளையர் முதலிய பலரால் அப்பொழுது அப்பொழுது காலத்திற்கு ஏற்ப ஆக்கப்பட்ட காண்டிகையுரைகள் பல இக்காலத்து வழங்குகின்றன.” என்றும் சாமிநாதையர் (1925. முகவுரை பக். 2) குறைத்தகவல்களையே கொடுத்துள்ளார். சென்ற நூற்றாண்டில் வெளிவந்து புகழ்பெற்ற இப்பதிப்புகளே அவருடைய இளமைக் கால நன்னூல் படிப்புக்குத் துணை நின்றவையாக இருக்க முடியும். அதை நினைத்தாவது சாமிநாதையர்106 அவற்றின் நூலடைவு விவரங்களை முழுமையாகத் தெரிவித்திருக்க வேண்டும். சாமிநாதையர் கொடுத்துள்ளதை விடவும் குறைவான தகவல்களே தண்டபாணி தேசிகர் முகவுரையில் காணப்படுகின்றன. குமாரசுவாமிப் புலவர் நன்னூலுக்கு உரை எழுதியது, நன்னூல் விருத்தியுரைப் பகுதிகளை முதன் முதல் விசாகப்பெருமாளையர் அச்சிட்டது போன்ற தகவல்களை அவர் முகவுரை (1957. பக். 8) வழங்குகிறது. ஆயினும் அந்தப் பதிப்புகளின் பிற நூலடைவு விவரங்கள் எதையும் அதில் காண முடியவில்லை. ஆதார நூல்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தொகுத்துப் பதிவு செய்வது ஆய்வின் வளர்ச்சிக்கு முக்கியம்; அந்த விவரங்களை முழுமையாகவும் துல்லியமாகவும் பதிவு செய்வது அதை விடவும் முக்கியம். இந்த நோக்கத்தோடு நன்னூலின் பதிப்பு வரலாறு விரிவாகப் பேசப்பட்டதோடு பழைய பதிப்புகளின் நூலடைவும் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளது. | | முனிவர் திருத்தங்கள் | சங்கர நமச்சிவாயர் உரையில் சிவஞான முனிவர் செய்த திருத்தங்களையும் அவர் இலக்கணக் கொத்திலிருந்து எடுத்து எழுதிய பகுதிகளைப் பற்றிய குறிப்புகளையும் சாமிநாதையரும் தண்டபாணி தேசிகரும் தங்கள் பதிப்புகளில் காட்டியது முன்பே (பக். 61, 63) குறிப்பிடப்பட்டது. என்றாலும் அவர்கள் அம்முயற்சியில் முழு வெற்றி அடையவில்லை. சங்கர நமச்சிவாயரின் உரையில் முனிவர் கூட்டியும் குறைத்தும் செய்த திருத்தங்களுள் ஒரு வகை சங்கர நமச்சிவாயர் உரையை நீக்கியது. காட்டாக, --------------------------- 106“தமக்கு முன்பு பிறர் பரிசோதித்து வெளியிட்ட பதிப்புகளைப் பற்றியும் இவர் பெரும்பாலும் குறித்ததே இல்லை.” என்று எஸ். வையாபுரிப் பிள்ளை (1968. பக். 296) கூறுவது உண்மை. | |
|
|