| பதிப்புரை | “முதனூல் கருத்தன்” (நன். 49) என்னும் நூற்பாவுக்குச் சங்கர நமச்சிவாயர் வரைந்த உரையில், “நூற்பெயர்க்கும் யாப்பிற்கும் சிறப்புவிதி உணர்த்த வேண்டுதலின் அவ்விரண்டனுள்” என்ற பகுதியைச் சிவஞான முனிவர் நீக்கிவிட்டார். இவ்வாறே பகுதியை விளக்கிக் கூறும் நூற்பாவின் (நன். 134) உரையிலும் முனிவர் ஒரு பத்தியை நீக்கிவிட்டார். இது போன்ற இடங்களில் சிவஞான முனிவர் செய்த திருத்தம் உரை நீக்கம் மட்டுமே; வேறு விளக்கம் ஒன்றும் அவர் எழுதவில்லை. சங்கர நமச்சிவாயர் உரையை முனிவர் மாற்றிக் குறைத்ததற்கும் வெறுமனே உரை நீக்கம் செய்ததற்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டைப் பதிப்பாசிரியர்கள் கவனிக்கவில்லை. அதனால் அவற்றை ஒரு வகையிலும் அவர்கள் குறிப்பிடவில்லை. சிவஞான முனிவர் சேர்த்து எழுதிய விளக்கங்களில் ஒரு பகுதி இலக்கணக்கொத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்பது மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் காலம் முதலே107 தெரிந்த செய்தி. தெய்வசிகாமணி முதலியாரும் சண்முகம் பிள்ளையும் அவற்றுள் எட்டு இடங்களைத் (நூ. 292, 295, 296, 297, 298, 299, 300, 317) தங்கள் பதிப்பில் (1889) குறித்தார்கள். சாமிநாதையர் (1935) ஒரே ஒரு இடத்தை மட்டும் (நூ. 296) குறித்தார். அவர்களை விட மிகுதியான பகுதிகளைத் தண்டபாணி தேசிகர் குறித்திருந்தாலும் அவர் பதிப்பிலும் சில இடங்கள்108 (நூ. 340, 351) விடுபட்டுவிட்டன. இவையன்றித் தொல்காப்பிய உரைப் பகுதிகளையும் தமது புத்துரை விளக்கங்களில் சிவஞான முனிவர் எடுத்துச் சேர்த்துள்ளார். உதாரணமாக நச்சினார்க்கினியர் உரையை அவர் சில இடங்களில் (நன். 89, சொல்லதிகாரத் தோற்றவாய், 267, 321) எடுத்து இணைத்துள்ளார். அவற்றை எல்லாம் விருத்தியுரைப் பதிப்பாசிரியர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அதனால் அப்பகுதியில் எல்லாம் சிவஞான முனிவரின் உரை109 என்று பலரால் பிறழ உணரப்படுகின்றன. அந்த உரைப் பகுதிகள் அனைத்தும் இப்பதிப்பில் கோண அடைப்புக்குறிகளாலும் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. | | மேற்கோள் இடவிளக்கம் | மூலநூலின் விளக்கத்துக்கு உரை; உரையின் தெளிவுக்கு உதாரணம் என்று இவை ஒன்றுக்கு ஒன்று உறவுடையன. உயிர்க்கு உணவுபோல நூலுக்கு உரமூட்டுவது உரை ---------------------------- 107சாமிநாதையர், 1925. முகவுரை பக். 3; என் சரித்திரம், 1950. பக். 559. 108சிவஞான முனிவர் எடுத்துக்காட்டிய பகுதிகளில் சில (இல. கொ. 43, 52-58, 61, 84 முறையே நன். 317, 302, 317, 340) தி. வே. கோபாலையர் பதிப்பித்த இலக்கணக் கொத்திலும் (தஞ்சாவூர், 1973.) குறிப்பிடவில்லை. 109க. ப. அறவாணன், 1977. பக். 161, 166; க. விநாயகம், 1991. பக். 51. | |
|
|