| பதிப்புரை | எண்களும் கொடுப்பது சாமிநாதையர் முறை. ஆனால் இம்முறையை அவர் மிகச் சில இடங்களில் மட்டுமே (நூ. 302, 308, 317) கடைப்பிடித்துள்ளார்; பெரும்பாலான இடங்களில் (நூ. 269, 344, 435, 437, 440, 441, 456, 457, 459) அவற்றுக்கு அவர் அடி எண்கள் கொடுப்பதில்லை. அவை அனைத்திற்கும் முதன் முதலாக இப்பதிப்பில் அடி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பழந்தமிழ் நூல்களில் சில சிதைந்துபோயின; பல112 மறைந்துபோயின. அதனால் உரையாசிரியர்கள் காட்டியுள்ள மேற்கோள்களுக்கு எல்லாம் மூலநூல் இடவிளக்கம் கொடுக்க முடிவதில்லை. இத்தகைய இடம் விளங்கா மேற்கோள்களுக்கு அவற்றை எடுத்தாண்ட உரையாசிரியர்களின் பெயரால் இடவிளக்கம் தருவது சாமிநாதையரின் பதிப்பு முறை. காட்டாக, “மயிலியன் மாதர் மருண்ம்” (நூ. 120) என்றும், | | | “தநநு எம்முதன் மகர மிடையிட்டு னளரவா மீற்றன சுற்றப் பெயரே.” | என்றும் சங்கர நமச்சிவாயர் உரையில் (நூ. 120, 276) காணப்படும் இடம் விளங்கா மேற்கோள்களுக்கு முறையே நன். சூ. 119, 275, மயிலை, மேற்கோள் என்று அவர் இடவிளக்கம் தருவார். சங்கர நமச்சிவாயர் உரையில் வேறு சில இடங்களிலும் (நூ. 209, 290, 351, 378, 385, 403, 405, 409, 419, 436, 439, 440, 457) இம்முறையை அவர் பின்பற்றியுள்ளார். பயனுள்ள ஒரு திருத்தத்தோடு அந்த முறை இப்பதிப்பில் பின்பற்றப்பட்டுள்ளது. தெளிவாகச் சொன்னால் ஒரு இடம் விளங்கா மேற்கோள் எந்த உரையாசிரியரால் முதன் முதல் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது என்று அறியுமாறு உரையாசிரியர்களின் காலமுறையில் இப்பதிப்பில் இடவிளக்கம் குறிக்கப்பட்டுள்ளது. காட்டாகச் சங்கர நமச்சிவாயர் (நூ. 378) காட்டியுள்ள, “வடுக ரருவாளர்” என்னும் பாடலுக்கு நேமி. சொல். 9 உரை மேற்கோள் என்பது சாமிநாதையர் தரும் இடவிளக்கம் அதற்குப் பதிலாகத் தொல். கிளவி. 51 இளம். உரை மேற்கோள் என்று இந்தப் பதிப்பில் இடவிளக்கம் தரப்பட்டுள்ளது. இதுபோலவே அவர் உரையில் (நூ. 351) உள்ள, “வெந்திறலினன் விறல்வழுதியொடு” என்னும் உதாரணத்துக்கு இல. விள. மேற்கோள்113 என்று சாமிநாதையர் கொடுத்துள்ள இடவிளக்கத்துக்குப் பதிலாக ----------------------------- 112அவை இருநூறுக்கு மேற்பட்டன என்பது மயிலை சீனி. வேங்கடசாமியின் (மறைந்துபோன தமிழ் நூல்கள், பாரி நிலையம், சென்னை, 1959.) கணிப்பு. 113இலக்கண விளக்க நூற்பாவின் (250) உரையில் காட்டப்பட்டுள்ள மேற்கோள்களில் பெரும்பகுதி மயிலைநாதர் (நன். 350) உரையிலிருந்து எடுக்கப்பட்டது என்பது கண்கூடு. | |
|
|