| பதிப்புரை | இப்பதிப்பில் நன். 350* மயிலை. உரை மேற்கோள் என்று இடவிளக்கக் குறிப்பு தரப்பட்டுள்ளது. சங்கர நமச்சிவாயர் அடிமறிமாற்றுப் பொருள்கோளுக்கு (நூ. 419) உதாரணமாகக் காட்டியுள்ள, “மாறாக் காதலர்” என்று தொடங்கும் பாடலுக்குச் சாமிநாதையர் தொல். எச். 11 நச்சினார்க்கினியர் மேற்கோள் என்று இடவிளக்கம் கொடுத்துள்ளதை விடவும் யா. வி. 73 மேற்கோள் என்று விளக்கம் தருவது சிறப்பு. இந்த உதாரணங்களை இளம்பூரணரும் மயிலைநாதரும் யாப்பருங்கல விருத்தியின் ஆசிரியரும் முதன் முதல் எடுத்துக்காட்டியுள்ளதால் அவர்கள் காலமுறையைத் தழுவி இடவிளக்கம் கொடுப்பதே மேற்கோள் விளக்க ஆராய்ச்சிக்குப் பயன்படக் கூடியது. இத்தலைப்பில் சொல்ல வேண்டிய இன்னொரு செய்தியும் உண்டு. “ஒருபொருட் பல்பெயர்” (நன். 397) என்னும் நூற்பாவின் உரையில், “வையைக கிழவன்” என்றும், “கொய்தளிர்த் தண்டலை” என்றும் தொடங்குகிற இரண்டு இனிய பாடல்களைச் சங்கர நமச்சிவாயர் எடுத்தாண்டுள்ளார். இவருக்கு முன்னர் இளம்பூரணர் (தொல். எச்ச. 63), சேனாவரையர் (தொல். எச்ச. 64), மயிலைநாதர் (நன். 396), வைத்தியநாத தேசிகர் (இல. விள. 355) முதலியோரும் இப்பாடல்களை எடுத்துக்காட்டியுள்ளனர். என்றாலும் இவற்றை இடம் விளங்கா மேற்கோள்களாகவே சாமிநாதையர் (1935. பக். 448-449) குறித்துள்ளார். இன்னும் சில114 பதிப்புகளில் இவை முத்தொள்ளாயிரப் பாடல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்வாறு கூறுவதற்குப் போதிய சான்றுகள் இல்லாததால் இவற்றை எடுத்துக்காட்டிய உரையாசிரியர்களின் காலமுறையைக் கருத்தில் கொண்டு இளம்பூரணர் காட்டிய உதாரணப் பாடல்களாக இப்பதிப்பில் அவை குறிக்கப்பட்டுள்ளன. உரையாசிரியர்கள் காட்டியுள்ள இடம் விளங்கா மேற்கோள் பாடல்களை எல்லாம் கால அடிப்படையில் எப்போதேனும் தொகுப்பதற்கு இந்த முறை பயன்படும். | | மரபுத்தொடர் விளக்கம் | உரைமரபுத் தொடர்களில் ஒன்று நிறுத்த முறை என்பது, நிறுத்திய அல்லது வைத்த முறை என்பது இப்பெயரெச்சத் தொடருக்குப்115 பொருள். யார் நிறுத்திய முறை என்பதை விளக்கும் போது தொல்காப்பிய உரைகளில் (தொல். கிளவி. 1; செய். 1) முரண்பாடு எழுவது போன்று நன்னூல் உரைகளில் எழவில்லை. பவணந்தி ----------------------------- 114தி. வே. கோபாலையர், இலக்கண விளக்கம் சொல்லதிகாரம், தஞ்சாவூர், 1971. பக். 777; சோம. இளவரசு, நன்னூல் விருத்தியுரை, 1981. பக். 491; 1990. பக். 557. 115நிறுத்த (“பல்புகழ் நிறுத்த படிமை யோனே”), நிறுத்திய என்றும் உடுத்த (“நீராரும் கடலுடுத்த நிலமடந்தை”), உடுத்திய என்றும் சில வினைகளுக்கே பெயரெச்சங்கள் இவ்வாறு அமையும். | |
|
|