| பதிப்புரை | நூற்பாக்களை மேற்கோள் காட்டுவதும் அறிய வேண்டிய செய்திகள் எனலாம். தொடர்களையே அன்றிப் “பாயிரம்” (நூ. 2 உரை), “இரண்டு” (நூ. 283 உரை), “பண்பு” (நூ. 443 உரை) போன்ற சொற்களையும், “ஒடு” (நூ. 104, 447 உரை) போன்ற உருபையும் அவர் எடுத்தாளுவதுண்டு. இவ்வாறு நன்னூல் சூத்திரங்களையும் தொடர்களையும் சங்கர நமச்சிவாயர் தமது உரையில் நூற்றுக் கணக்கான இடங்களில் மிகுதியாக மேற்கோள் காட்டியிருந்தாலும் ஒரு இடத்திலேனும் பாடபேதம் நிகழவில்லை; நிகழ்ந்திருந்தால் நிச்சயம் குறிக்கப்பட்டிருக்கும். இனி, ஐயத்துக்கு இடமான வினையியல் நூற்பாவை நோக்குவோம். இந்நூற்பாவின், “ஆறுந் தருவது வினையே” (நன். 320) என்ற தொடரை மட்டும் சங்கர நமச்சிவாயர் இரண்டு இடங்களில் (நன். 340, 426) காட்டுவார். அவற்றள் ஒன்று 426-ஆம் சூத்திரம் என்பது முக்கியம். ஏனென்றால் அதற்கு அடுத்த நூற்பாவின் உரையில்தான் (நன். 427) பாடபேதம் என்று கருதப்படும் அந்த உதாரணம் காட்டப்பட்டுள்ளது. அந்த ஒரு மேற்கோளில் மட்டும் பாடபேதம் நிகழ்ந்திருக்கும் என்று கருதுவது சங்கர நமச்சிவாயரின் உரைப் போக்குக்குப் பொருந்தவில்லை. அப்படி என்றால் இப்பகுதியில் (நன். 427) சங்கர நமச்சிவாயர் காட்டியுள்ள உதாரணம் ஏது என்ற வினாவுக்கு நாம் விடை காண வேண்டும். உரைத் தெளிவுக்குத் தேவையான உதாரணங்களைத் தாமே படைத்துக்கொள்வதும் செய்யுளை உரைநடையாக அமைத்துக்கொள்வதும் உரையாசிரியர்களின் இயல்பு. இலக்கியச் செய்யுள், உரைச் செய்யுள், உரைச் சூத்திரம், உதாரணச் சூத்திரம், (இல. கொ. 7, 131 உரை) என்ற சொல்லாட்சி, நூலாசிரியர்கள் இயற்றியுள்ள122 உதாரண நூற்பாக்கள், உதாரணங்களை அவர்கள் செய்யுளாகத் தொடுத்துக் காட்டும்123 உரைச் செய்யுள்கள், சேனாவரையர் போன்ற உரையாசிரியர்கள் குறட்பாக்களை உரைநடையாக மாற்றி அமைத்துக் கொண்ட தொடர்கள்124 முதலியன இவற்றுக்கு நல்ல சான்றுகள். இவை மட்டும் அல்ல. சில சமயங்களில் நூற்பாக்களும் உதாரணங்களாக மாற்றப்படுவதுண்டு. காட்டாக வேண்டுவது, தக்கது என்ற பொருளில் பெயருக்குப் ---------------------------------- 122வேற்றுமைகள் வினையைக் கொண்டு முடிவதை விளக்கப் புத்தமித்திரனார் (வீர. 39), சுப்பிரமணிய தீக்கிதர் (பி. வி. 10), சாமிநாத தேசிகர் (இல. கொ. 15) முதலியோர் இயற்றின. “ஆழிவெள்வேல்” (யா. கா. 2) என்ற தொடரும் இத்தகையதே. 123குணசாகரர், “கோழி வேந்தன்” (யா. கா. 5) என்றும் மயிலைநாதர் , “சரிசமழ்ப்புச் சட்டி” (நன். 105) என்றும் மேற்கோள் செய்யுள்களை எடுத்துக்காட்டுவார்கள். 124”இகழ்ச்சியிற் கெட்டான், மகிழ்ச்சியின் மைந்துற்றான்” தொல். வேற். 17 சேனா.), “பயனில்சொற் பாராட்டினான்”, “யான் எனது என்னும் செருக்கறுத்தான்” (இல. கொ. 8 உரை) முதலிய தொடர்கள். | |
|
|