பக்கம் எண் : 86
  

பதிப்புரை
 

(நன். 341, 351, 396) என்றவாறு அவற்றுள் நான்கு பாடபேதங்களை மட்டுமே
சாமிநாதையர் குறித்துள்ளார். மேலும் சங்கர நமச்சிவாயர் (நன். 351) காட்டியுள்ள,
“கானவ ரிரிய” என்று தொடங்கும் செய்யுளில் (சீவக. 452) நான்கு பாடபேதங்கள்
காணப்படுகின்றன. இந்த நான்கில் ஒன்றைக் கூடச் சாமிநாதையர் குறிக்கவில்லை.
நமச்சிவாயர் உரையை அவர் பதிப்பிப்பதற்கு முன்பே சீவக சிந்தாமணிக்கு மூன்று
பதிப்புகள் வெளிவந்துவிட்டதால் இந்தப் பாடபேதங்களை அவர் குறித்திருக்கலாமே
என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது. இதுபோலவே அகநானூறு, புறநானூறு,
கலித்தொகை முதலிய இலக்கிய மேற்கோள்களில் நிகழ்ந்துள்ள பாடபேதங்களும்அவரால் முழுமையாகக் குறிக்கப்படவில்லை. முதுமைத் தளர்ச்சியால் சாமிநாதையர்
இவ்வாறு குறிக்காமல் விட்ட பாடபேதங்கள் முதல் முறையாக இப்பதிப்பில்
உடுக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
 

ஒப்பியல்
 

     நூற்பாக்களின் முதற்குறிப்பு அகராதியில் நன்னூலோடு ஒத்த தொல்காப்பிய
ற்பாக்களின் எண்களையும் இணைத்துள்ளது இப்பதிப்பின் இன்னொரு நல்ல பகுதி.
இவ்விரு இலக்கணங்களையும் ஒப்பிட விரும்புவோருக்கு இப்பகுதி பயன்படும். இதன்
அமைப்பு முறை அப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. மணிச்சுருக்கமாக அமைந்துள்ள
இந்த ஒப்பியலின் வரலாறு அறிய வேண்டியது.

     கல்விக் கோட்பாடுகளில் ஒப்பியல் முறை வாழையடி வாழையாக வருவது. இந்த
முறையைத் தொல்காப்பியரும் பவணந்தி முனிவரும்,
 
  “அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலு
முளவென மொழிப விசையொடு சிவணிய
நரம்பின் மறைய வென்மனார் புலவர்.”
 
என்னும் (தொல். நூன். 33) நூற்பாவிலும்,
 
  “இன்ன தின்னுழி யின்னண மியலும்
என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா
நல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே.”
 
     என்னும் (நன். 460) நூற்பாவிலும், “பிறன்கோட் கூறல்” (தொல். மரபு. 112; நன்.
14) என்னும் உத்தி வகையிலும் குறிப்பிடுவார்கள். உரையாசிரியர்களுள் யாப்பருங்கல
விருத்தியின் ஆசிரியரும் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலிய தொல்காப்பிய