| பதிப்புரை | முதலியவற்றை நோக்கிச் சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் பதிப்பிப்பதற்கு" விதிகளை வகுத்துக்கொண்டு, அவை நூல் முழுதும் ஒரே சீராகக் டைப்பிடிக்கப்பட்டுள்ளன. அதனால் சாமிநாதையர் பதிப்பில் (சங்கர நமச்சிவாயர் உரை, 1935.) காணப்படும், ‘கேட்போரென்பாருமுளர்’ (பக். 4), ‘பெயர்விகற்பங்களைக்கூறியது’ (பக். 7), ‘என்பாருமுளராலோவெனின்’ (பக். 8), ‘பாயிரங்கூறுதல்நூல்கட்கன்றி’ (பக். 8) ‘நூல்களின் வரலாறொன்றுமே’ (பக். 8), ‘அறிவினையுடைய’ (பக். 10), ‘இதுவுமது’ (பக். 18), ‘வேறெடுத்தோதினாரென்க’ (பக். 61), ‘மணியின்கண்ணொளி’ (பக். 273) என்பன போன்ற தொடர்களையோ அல்லது தண்டபாணி தேசிகர் பதிப்பில (நன்னூல் விருத்தியுரை, 1957.) காணப்படும், ‘ஒருமுதலேயாகி’ (பக். 5), ‘திருமேனியாகவுடையான்’ (பக். 5), ‘காட்டப்படுவனவுமுள’ (பக். 11) ‘அக்காலத்துள்ளன’ (பக். 12), ‘இக்கருத்தறியாத’ (பக். 13), ‘இரண்டாய்வரினும்’ (பக். 14), ‘ஒன்றோடொன்று’ (பக். 14), ‘விதந்துகூறவேண்டும்’ (பக். 31), ‘முறையாகவைக்கப்பட்டன’ (பக். 62), ‘முதலிடைகடைகளினின்று’ (பக். 74), ‘குறுகுதற்கேதுவன்று’ (பக். 78) என்பன போன்ற தொடர்களையோ இப்பதிப்பில் காண முடியாது. இதுபோலவே, ‘முழுவது மொத்து’ (பக். 10), ‘நூல்தழுவிய மதங்கள்’ (பக். 13), ‘கூறினா ரென்றுணர்க’ (பக். 60), ‘பலவென்னு மொருசொல்’ (பக். 125), ‘பிறசொற்களுமன்ன’ (பக். 125), ‘வினையெச்சத்திற் கின்மையின்’ (பக். 126), ‘முடித்த லென்னு முத்தியான் ஈண்டுக்கூறப்பட்ட தென்க’ (பக். 142) என்று சாமிநாதையர் பிரித்துள்ளது போன்றோ அல்லது, ‘கூறு முயற்சியானும்’ (பக். 62), ‘இவ்வாறே யொட்டுக’ (பக். 210), ‘எல்லா நம்மையும்’ (பக். 214), ‘எல்லா நம்மாலும்’ (பக். 214), ‘இறுதியாக வுடையமொழிகள்’ (பக். 343), ’நிற்பனபெய ரெச்சவினை’ (பக். 348), ‘பெயர்ப்பால் பொதுமையினை’ (பக். 373), ‘இசை எச்சங்கள்’ (பக். 378), ‘பண்பு உருபு’ (பக். 385) என்று தண்டபாணி தேசிகர் பிரித்துள்ளது போன்றோ சொற்கள் இப்பதிப்பில் பிரிக்கப்படவில்லை. இந்த எடுத்துக்காட்டுகள் நன்னூல் பதிப்புகளுக்கு மட்டுமே உரியன அல்ல; பெரும்பாலான தமிழிலக்கணப் பதிப்புகளில் இத்தகைய தொடர்கள் தவறாமல் காணப்படும். கழகம் வெளியிட்ட இலக்கணப் பதிப்புகளில் அவை சிறிது கூடுதலாகவும் தி. வே. கோபாலையர் பதிப்பித்த இலக்கண விளக்கம், இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம் போன்ற இலக்கணப் பதிப்புகளில் கொஞ்சம் குறைவாகவும் காணப்படும். பழைய பதிப்பாசிரியர்கள் புணர்ச்சி விதிகளைப் புறக்கணித்தது இந்நிலைக்குக் காரணம் என்று விரைந்து முடிவுகட்டிவிடக் கூடாது; புணர்ச்சி விதிகளை அவர்கள் பின்பற்றியுள்ளார்கள்; ஆனால் நூல் முழுதும் ஒரே சீராக அவற்றைப் பின்பற்றிப் | |
|
|