| பதிப்புரை | தெளிவுபடுத்தப்பட்டன. இந்தப் புதுவகை இலக்கணக் கோட்பாடுகளை மரபுமுறைக் கோட்பாடுகளுடன் ஒப்புநோக்கி, நிலைமொழி வருமொழிகளை வரையறுத்துக்கொண்டு, சந்திவிதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை நூல் முழுதும் பின்பற்றிச் சொற்கள சேர்த்தும் பிரித்தும் அச்சிடப்பட்டுள்ளன; இடம் இன்மையால் சொற்கள் செயற்கையாகப் பிரிக்கப்படும் போது வரியின் இறுதியில் இணைப்புக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இந்தச் சந்திவிதிகள் அனைத்தையும் பதிப்புரையில் விளக்குவது பொருத்தம் ஆகாது. அதனால் சிலவற்றை மட்டும் குறிப்பாகச் சுட்டிச் செல்வேன். ஆகிய என்னும் சொல், ‘ஆயனாகிய சாத்தன்’ (நூ. 365) என்று பண்புருபாக வரும்போது சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ‘வகுப்பதூஉம் வகுக்கப்படுவதூஉம் ஆகிய சம்பந்தம்’ (சிற. பாயி.), ‘இடுகுறிப்பெயரும் காரணப்பெயரும் ஆகிய இரண்டும்’ (நூ. 62) என்று எண்ணும்மையும் தொகைச்சொல்லும் பெற்று எண்ணுப்பொருளிலும், ‘நெட்டெழுத்தான் ஆகிய மொழி’ (நூ. 129) என்று பெயரெச்சமாக ஆக்கவினைப் பொருளிலும் வரும் போது பிரித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆகிய என்பதன் மாற்று வடிவமாகிய ஆய என்பது, ‘தாழாய கோல்’ (நூ. 225), ‘தெரிநிலை உடன்பாட்டு வினைமுற்றும் எச்சமும் எதிர்மறை வினைமுற்றும் எச்சமும் ஆய வினைப் பகுபதங்கள்’ (நூ. 132), ‘உயிரும் மெய்யும் ஆய இரண்டனையும்’ (நூ. 108), ‘எழுத்தான் ஆய பதம்’ (நூ. 128) என்று அப்பொருள்களில் வரும் போது அதற்கும் இவ்விதி பொருந்தும். இதன் மற்றொரு மாற்று வடிவமாகிய ஆன என்பதற்கும் இதுவே விதிமுறை என்பது விளக்காமலே விளங்கும். ‘ஆகிய’ போலவே, ‘ஆம்’ என்பதும் உரைகளில் பயின்று வரும் சொல். காட்டாக, “மேல், “திரியும்” (நூ. 146) என்றவற்றுள் சிறப்பெழுத்தாகிய ஏழாம் உயிர் இகரமும் இருவும் ஆம்; ஐந்து வருக்கங்களினும் இடையில் நின்ற மூன்றும் அவ்வவ் வருக்கங்களின் முதலெழுத்து ஆம்; எட்டாம் மெய்யான சவ்வருக்கத்துள் எடுத்துச் சொல்லும் மெய் ஒரோவிடத்து யகரமும் ஆம்; முப்பதாம் மெய் மொழிமுதற்கண் சகரமும் இடைக்கண் யகரமும் ஆம்; முப்பத்தொன்றாம் மெய் மொழிமுதற்கண் சகரமும் இடைக்கண் டகரமும் ஆம்; முப்பத்திரண்டாம் மெய் மொழிமுதற்கண் சகரமும் இடைக்கண் தகரமும் ஆம்; முப்பத்துமூன்றாம் மெய் மொழிமுதற்கண் அகரமும் இடைக்கண் ககரமும் ஆம்; முப்பத்தைந்தாம் மெய் இரண்டு ககரம் ஆம்; பொதுவெழுத்துள் மொழியிறுதி ஆகாரம் ஐகாரம் ஆம்; மொழியிறுதி ஈகாரம் இகரம் ஆம்.” (நூ. 147) என்னும் பதவியல் நூற்பாவின் பொழிப்புரையில் இந்தச் சொல் பதினேழு முறை வந்துள்ளது. பழம்பதிப்புகளில், | |
|
|