| பதிப்புரை | இத்தொடர்களில் உள்ள132 ஆம் அனைத்தும் முன் நிற்கும் சொற்களோடு சேர்த்தே பதிப்பிக்கப்பட்டுள்ளன. எண்ணுப்பெயர்களோடு, ‘ஏழாம்’, ‘எட்டாம்’ என்று வந்துள்ள, ‘ஆம்’ ஏழும் பின்னொட்டுகளாகச்133 செயல்படுகின்றன. இந்த ஏழையும் எண்ணுப்பெயர்களோடு சேர்த்துப் பதிப்பித்துள்ளது முறை. ஆனால், ‘இருவுமாம்’, ஒரோவிடத்து யகரமுமாம்’, ‘மொழியிறுதி ஆகாரம் ஐகாரமாம்’ என வரும் எஞ்சியுள்ள பத்தையும் சேர்த்துப் பதிப்பித்துள்ளது விவாதத்துக்கு உரியது. ‘ஆம்’ என்பது ஆகும் என்பதன் மாற்று வடிவம்; ஆகு134 என்னும் வினையடியிலிருந்து தோன்றுவது. இது பெயரெச்சத்துக்கும் வினைமுற்றுக்கும் பொதுவானது. பவணந்தி முனிவர், “என இரண்டு ஆகும்”, நான்கும் ஆம்” (நூ. 270) என்று ஒரே நூற்பாவில் இருவடிவங்களையும் வினைமுற்றாகப் பயன்படுத்துவார். இந்நூற்பாவின் உரையில் சங்கர நமச்சிவாயர் அவை இரண்டையும், ‘ஆம்’ என்றே எழுதுவார். மூலபாடத்தில் வரும் ஆகும் என்னும் வினைமுற்றுக்கு அவர் இவ்வாறு பல இடங்களில் (நூ. 6, 7, 8, 17, 60, 272, 298, 312, 415) ஆம் என்று உரை வரைவார். இது அவருடைய நடை. மேலும், செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்துக்கும் வினைமுற்றுக்கும் சிறப்புவிதி கூறும் நூற்பாவில் முற்றுச் சொல்லின் இறுதி உயிராவது உயிர்மெய்யாவது கெடுதலும் உண்டு என்று பவணந்தி முனிவர் (நன். 341) விதி வகுப்பார். சங்கர நமச்சிவாயர் அந்நூற்பாவின் உரையில், “செய்யுளுள் உம் உந்து ஆம் எனவே ஏனைய வழக்குச் செய்யுள் ஈரிடத்தும் ஆம்” என்று நயவுரை கூறி, “அஃது ஆம், இவை போம்” என்று வழக்கிலிருந்து உதாரணங்களும் வழங்குவார். அதோடு அல்லாமல், “ஆம் என்பதனை எல்லா நூற்கும் ஆம் எனக் கூட்டுக.” (நூ. 3) என்றும், “பல்லோர் பகுதியின் பெயர் ஆம் எனக் கூட்டுக.” (நூ. 278) என்றும் சிற்சில இடங்களில் அவர் தெளிவாக வினைமுடிபு கூறுவதும் உண்டு. மற்றொரு இடத்தில் “சாலப் பல ஆம் என ஆம் என்னும் வினைப் பயனிலை தொக்கு ---------------------------- 132“இடைக்கண் டகரமும் ஆம்” என்ற ஒரு தொடர் மட்டும் தண்டபாணி தேசிகர் பதிப்பில் (1957. பக். 131; 1971. பக். 187) பிரித்துப பதிப்பிக்கப்பட்டுள்ளது. 133சங்கர நமச்சிவாயர் (நூ. 179), ‘ஆம்’ என்பதைச் சாரியை என்பார். 134இந்த வினைச்சொல்லின் முதல்நிலைபற்றிப் பவணந்தி முனிவர், பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கருத்துகளைச் சாமிநாத தேசிகர் (இல. கொ. 86) தொகுத்துக் கூறுவார். | |
|
|