பக்கம் எண் : 97
  

பதிப்புரை
 

திரு வ. அய். சுப்பிரமணியம், திருவனந்தபுரம்; நன்னூல் விருத்தியுரையின
 கடிதப்பிரதியை எனக்கு வழங்கியவர் திரு பா. ரா. சுப்பிரமணியன், சென்னை; என்
பதிப்புப் பணிக்கு பேருதவி புரிந்த நன்னூல் விருத்தியுரைப் பதிப்புகளை வெளியிட்டு
உதவியோர் திரு ஆறுமுக நாவலர், திரு உ. வே. சாமிநாதையர், திரு ச. தண்டபாணி
தேசிகர்; நன்னூல் பதிப்புகளை எனக்குக் கொடுத்து உதவியோர் திரு அ. ம.
சத்தியமூர்த்தி, கும்பகோணம்; திரு இரா. சாரங்கபாணி, அண்ணாமலைநகர்; திரு சொ.
சிங்காரவேலன், மயிலாடுதுறை; திரு கோ. சீனிவாச வர்மா, அண்ணாமலைநகர்; திரு இ.
சத்தியமூர்த்தி, சென்னை; திரு மொ. மாசிலாமணி, சிதம்பரம்.

     நன்னூல் ஆய்வுக்குத் தேவையான நூல்களை வழங்கியவை மறைமலை அடிகள்
நூலகம், சென்னை; தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம், தஞ்சாவூர்; கொலோன்
பல்கலைக்கழக நூலகம், கொலோன், ஜெர்மனி; சொற்களைச் சந்தி பிரித்து எழுதுவதில்
உதவியோர் திரு கி. அரங்கன், தஞ்சாவூர்; திரு பொன். கோதண்டராமன், சென்னை;
திரு செ. வை. சண்முகம், அண்ணாமலைநகர்; திரு இராம. சுந்தரம், தஞ்சாவூர்;
நன்னூல் விருத்தியுரைக் கருத்துகள் சிலவற்றை விளக்கியவர் திரு தி. வே.
கோபாலையர், பாண்டிச்சேரி; ஆய்வுப் பணிக்கு நிதியுதவி செய்த நிறுவனங்கள்:
ஜெர்மன் ஆராய்ச்சிக் கழகம், போன், ஜெர்மனி; ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம்,
ஹைடெல்பெர்க், ஜெர்மனி; பல்கலைக்கழக நிதிக்குழு, புது டில்லி.

     சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் ஆய்வாளனாக
இருந்த மாதங்களில் (01. 10. 94 - 27. 03. 95) தோழமை உணர்வுடன் உதவியதோடு
சிறப்புரை ஒன்றையும் வழங்கியவர் திரு பொன். கோதண்டராமன், சென்னை;
பதிப்புரையைப் படித்துப் பயனுள்ள திருத்தங்கள் சிலவற்றை வழங்கியவர்கள் திரு
இராம. சுந்தரம், தஞ்சாவூர்; திரு பா. ரா. சுப்பிரமணியன், சென்னை; பழம்பெரும்
பல்கலைக்கழகம் ஒன்றில் அமைதியாகப் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு அளித்தவர்
திரு கமில் சுவலபில் ( Kamil V. Zvelebil),  பிரான்சு.   

     மெய்ப்படிகளை எழுத்தெண்ணிப் படித்துத் திருத்தியவர் திரு பி. பட்டுசாமி,
காவாலகுடி; என் தேவை அறிந்து மெய்ப்படிகளை அடிக்கடி அச்சிட்டுத் தந்ததோடு
நூலின் வடிவத்தையும் அமைத்துக் கொடுத்தவர் திரு தாமஸ் லேமான்  (Thomas
Lehmann),
 ஹைடெல்பெர்க், ஜெர்மனி; இந்த நூலை விரைந்து அச்சிட்டு உதவியது
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை; நூல் வெளியீட்டுக்கு நிதியுதவி நல்கியது
தெற்காசிய நிறுவனம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி.