பக்கம் எண் : 98
  

பதிப்புரை
 

     ஆய்வுப் பணியில் ஆழ்ந்திருந்த சமயங்களில் எல்லாம் குடும்பக் கடமைகளை
வலிந்து ஏற்றுக்கொண்டவள் என் வாழ்க்கைத் துணைவி திருமதி சின்னாயாள்; என்
நல்ல முயற்சிகளுக்குத் தோன்றாத் துணையாய் என்னுள் நிறைந்திருப்பவன் எல்லாம்
வல்ல இறைவன்.

     எடுத்த பணி இனிது நிறைவேறும் இந்த நல்ல நேரத்தில் இவர்கள
எல்லோரையும் நன்றியுணர்வோடு நினைவுகூர்கிறேன்; நிறுவனங்களை மனக்கண் முன்
நிறுத்தி மகிழ்கிறேன். இப்பதிப்பின் நல்லியல்புகள் எல்லாம் என் ஆசிரியர்களுக்கு
உரியன; குற்றம் குறைகள் எனக்கே உரியன. இளமையில் மனப்பாடம் செய்த,
 
  “நீரளவே ஆகுமாம் நீராம்பல்; தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு.” (வாக்குண்டாம் 7:1-2)
 
என்ற ஒளவையார் வாக்கு றினைவுக்கு வருகிறது; குறைகள் கண்ணில் படும் போது அதை நினைத்துக்கொள்வது நல்லது.
 

நிறைவுரை


     நூல், உரை, பதிப்பு முதலியவற்றின் வரலாறுகளை ஒருங்கே எழுதியதால்
பதிப்புரை வளர்ந்துவிட்டது. அதோடு, “சொன்னால் விரோதமிது ஆகிலும
 சொல்லுகேன், கேண்மினோ”
என்னும் நம்மாழ்வார் திருவாக்கின் வழி நின்று
பிழைக் கருத்துகள் பல இங்கு மறுக்கப்பட்டதும் அதற்கு ஒரு காரணம். ஆயினும்
அறிய வேண்டிய செய்திகளை அழுத்தம் திருத்தமாகச் சொல்லத்தானே வேண்டும்?
பிழை திருத்தப் பட்டியல் இல்லாததால் நூலில் பிழை இல்லை என்பது பொருள் அல்ல;
பிழைகள் இருக்கலாம். நூற்பாக்கள், மேற்கோள்கள், ஒப்புமைப் பகுதிகள்,
அடிக்குறிப்புகள், அகராதிகள் முதலியவற்றில் ஆயிரக் கணக்காண எண்கள் கடற்கரைக்
கிளிஞ்சல்களாக நூல் முழுதும் கலந்து கிடக்கின்றன. அவற்றில் பிழை நேர வாய்ப்பு
உண்டு; நேர்ந்திருந்தால் திருத்திக்கொள்க. ஆனால், ‘அமெரிக்கன்’, ‘இராமாநுச
கவிராயர்’, ‘சடகோப ராமாநுஜாசாரியர்’, ‘சென்னப்பட்டணம்’, ‘நிலயம்’, ‘புறநடை’, ‘ஜீ.
யூ. போப்பையர்’ முதலியன பிழைகள் அல்ல.

     நன்னூல் விருத்தியுரைக்கு இது ஒரு செம்பதிப்பு; திருத்தப் பதிப்பு அல்ல.
சிவஞான முனிவர் தமது கைப்படத் திருத்திய புத்தம் புத்துரையின் மூலக்
கையேட்டைச் சங்கர