100

பாங்கி மதியின் அவரவர் மனக்கருத்துணர்தற்குச் செய்யுள்:

1"புனங்காவ லன்றிவள் பூண்டது மாண்டகை போந்ததுமா
னினங்காவ லின்கலை யெய்யவன் றாலிக லாழிவிந்தை
தனங்காவ லன்றஞ்சை வாணனன் னாட்டிவர் தங்களிற்றா
மனங்காவல் கொண்டதெல் லாங்கண்க ளேசொல்லும் வாய்திறந்தே"

எனவும்,

2"ஏனல் காவ லிவளு மல்லள்
மான்வழி வருகுவ னிவனு மல்ல
னரந்தங் கண்ணி யிவனோ டிவளிடைக்
கரந்த உள்ளமொடு கருதியது பிறிதே
நம்முன் னாணினர் போலத் தம்முண்
மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல
உள்ளத் துள்ளே மகிழ்ப
சொல்லு மாடுப கண்ணி னானே"

எனவும் வரும். இவையெல்லாந் தோழி கூற்றுள்:

3"வந்த கிழவனை மாயஞ் செப்பிப்
பொறுத்த காரணங் குறித்த காலையும்"

என்பதனாற் கொள்ளப்பட்டன.

(25)

பாங்கி மதியுடன்பாட்டின் விரி

142. ஈங்ஙன மியம்பிய இருநான்கு கிளவியும்
பாங்கி மதியுடன் பாட்டது விரியே.

(இ - ம்.) பாங்கி மதியுடன்பாட்டின் விரி இவையென உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஐயமுற்றோர்தல் முதலாக மதியின் அவரவர் மனக் கருத்துணர்தல் ஈறாகச் சொல்லப்பட்ட 4எட்டுக் கிளவியும் பாங்கி மதியுடன் பாட்டது விரியாம் என்றவாறு.

(26)


1. த. கோ. செ: 80.

2. தொல். பொருள், களவியல், 23ஆம் சூ. உரைமேற்கோள்.

3. தொல், பொருள், களவியல் சூ.23.

4. முன்னுற வுணர்தல் 3, குறையுற வுணர்தல் 2, இருவரு முள்வழி அவன் வரவுணர்தல் 3, ஆக 8.