101

9. பாங்கியிற் கூட்டம்

பாங்கியிற் கூட்டத்தின் வகை

143. இரந்துபின் னிற்றல் சேட்படை மடற்கூற்று
மடல்விலக் குடன்படன் மடற்கூற் றொழிதல்
குறைநயப் பித்தல் நயத்தல் கூட்டல்
கூடல் ஆயங்கூட்டல் வேட்டலென்
றீராறு வகைத்தே யிகுளையிற் கூட்டம்.

(இ - ம்.) பாங்கியிற் கூட்டம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) இரந்து பின்னிற்றல் முதலாக வேட்டல் ஈறாகச் சொல்லப்பட்ட பன்னிரண்டு வகையினை உடைத்துப் பாங்கியிற் கூட்டம் என்றவாறு.

(27)

இரந்துபின் நிற்றலும் சேட்படையும்

144. 1தலை வனுட்கோள் சாற்றலும் பாங்கி
குலமுறை கிளத்தலும் தலைவன் தலைவி
தன்னை யுயர்த்தலும் நன்னுதற் பாங்கி
அறியாள் போன்று வினாதலும் இறையோன்
இறைவி தன்மை யியம்பலும் பாங்கி
தலைவி அருமை சாற்றலும் தலைவன்
இன்றியமை யாமையியம்பலும் பாங்கி
நின்குறை நீயேசென்றுரை யென்றலும்
பாங்கியைத் தலைவன் பழித்தலும் பாங்கி
பேதைமை யூட்டலும் காதலன் தலைவி
மூதறி வுடைமை மொழிதலும் பாங்கி
முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறலும்
தன்னிலை தலைவன் சாற்றலும் பாங்கி
உலகியல் உரைத்தலும் தலைமகன் மறுத்தலும்


1. இது முதல் ஆறு சூத்திரங்கள் பாங்கியிற் கூட்டத்தின் விரி உணர்த்துவனவாம்.