யினப்பு ளோப்பு மெமக்குநல லெவனோ புலவு நாறுதுஞ் செலநின் றீமோ பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ வன்றே யெம்ம னோரிற் செம்மலு முடைத்தே" எனவும் வரும். தலைவன் தலைவியை உயர்த்திக் கூறற்குச் செய்யுள்: 1"மிக்கா ருளரல்லர் மெல்லியன் மாதரின் மேதினிமேல் தக்கார் புகழ்தஞ்சை வாணர் பிரான்றமிழ் நாடனையாய் மைக்கார் நிகர்குழல் வள்ளிசெவ் வேளுக்கு வல்லவையாம் இக்கா ரணமுண ராதென்கொ லோநின் றியம்புவதே!" எனவும், 2"திங்களுள் வில்லெழுதித் தேராது வேல்விலக்கித் தங்களு ளாளென்னுந் தாழ்வினா - லிங்கட் புனங்காக்க வைத்தார்போற் பூங்குழலைப் போந்தென் மனங்காக்க வைத்தார் மருண்டு" எனவும் வரும். பாங்கி அறியாள் போன்று வினாதற்குச் செய்யுள்: 3"பொன்னிய லூசலும் பொய்தலும் மாடியெப் போதுநன்னீர் மன்னிய நீலமு நித்தில முங்குற்று வாணன்றஞ்சை இன்னிய லாரு மிளமரக் காவி னிடம்பிரியாக் கன்னியர் தாம்பலர் யார்நின்னை வாட்டிய காரிகையே" எனவும், "வாங்கிருங் கானலுள் வண்ட லயருந் தேங்கமழ் கூந்தன் மகளிருள் யாங்கா கியதோ பாங்குநின் னருளே" எனவும் வரும். இறையோன் இறைவி தன்மை யியம்பற்குச் செய்யுள்: 4"தாளிணை மாந்தளி ரல்குல்பொற் றேரிடை சங்கைகொங்கை கோளிணை கோலக் குரும்பைகை காந்தள் கொடிக்கரும்பார் தோளிணை வேய்முகந் திங்கள்செவ் வாயிதழ் தொண்டையுண்கண் வாளிணை வார்குழ லாய்வாணன் மாறையெம் மன்னுயிர்க்கே" எனவும்,
1. த. கோ. செ: 83. 2. திணைமாலை நூற். 30. 3. த. கோ. செ: 84. 4. த. கோ. செ: 85.
|