104

1"முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய மென்குரல் கிழக்குவீழ்ந் தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
கியான்ற னறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொ றானே
பெருமுது செல்வ னொருமட மகளே"

எனவும் வரும்.

பாங்கி தலைவியருமை சாற்றற்குச் செய்யுள்:

2"புகழார் வரையெம் புரவலன் காதற் புதல்வியைநீர்
இகழா வெளியளென் றெண்ணப் பெறீரெமக் கென்றும் வண்மை
திகழா பரணன் செழுந்தஞ்சை வாணன் சிலம்பினுள்ளீர்
அகழார் கலியுல கிற்புல னான வணங்கவளே"

எனவும்,

3"நெருநலு முன்னா ளெல்லையு மொருசிறைப்
புதுவீ ராதலிற் கிளத்த னாணி
நேரிழை வளைத்தோணின் றோழி செய்த
வாரஞர் வருத்தங் களையா யோவென
வெற்குரை யுறுதி ராயிற் சொற்குறை
யெம்பதத் தெளிய ளல்ல ளெமக்கோர்
கட்காண் கடவு ளல்லளோ பெரும
வாய்கோன் மிளகின் மலையங் கொழுங்கொடி
துஞ்சுபுலி வரிப்புறந் தைவரு
மஞ்சுசூழ் பனிவரை மன்னவன் மகளே"

எனவும் வரும்.

தலைமகன் இன்றியமையாமை இயம்பற்குச் செய்யுள்:

4"வனைந்தா லனகொங்கை மாதுரு வாய்த்தஞ்சை வாணன்வெற்பிற்
புனைந்தா லனைய புனத்தயல் வாய்வண்டு போதகத்தே
னனைந்தா லனையவென் னல்வினை தான்வந்து நண்ணிற்றென்று
நினைந்த லணங்கனை யாய்தமி யேனுயிர் நிற்கின்றதே"

என வரும்.


1. குறுந். செ: 337.

2. த. கோ. செ: 86.

3. தொல், பொருள், களவியல்; 23ஆம் சூ. உரைமேற்கோள்.

4. த. கோ. செ: 87.