பாங்கி நின் குறை நீயே சென்றுரை யென்றற்குச் செய்யுள்: 1"மருப்பா வியதொங்கல் வாணன்றென் மாறை வனசமலர்த் திருப்பாவை யன்னவென் சேயிழை யாட்குன் றிருவுளத்து விருப்பா கியகுறை யுள்ளதெல் லாஞ்சொல்லி வேண்டுகநீ பொருப்பா மொழியப் பெறாரெம்ம னோரிவை போல்வனவே" எனவும், 2"தன்னையுந் தானாணுஞ் சாயலாட் கிஃதுரைப்பின் என்னையு நாணப் படுங்கண்டாய்-மன்னிய வேயேய்மென் றோளிக்கு வேறா வினியொருநா ணீயே யுரைத்து நிறு" எனவும் வரும். பாங்கியைத் தலைவன் பழித்தற்குச் செய்யுள்: 3"வில்லார் நுதல்வெய்ய வேலார் விழிக்கென் மெலிவுசொல்ல வல்லா ரிலைசொல்ல வல்லையென் றியான்றஞ்சை வாணன்றெவ்வின் ஒல்லா திதுநுமக் கென்றுண ரேனின் றுணங்கியிந்நாள் எல்லா மிரந்தது நின்குறை யேயல்ல வென்குறையே" எனவும், 4"மாதர் குறைமுடிக்க வல்லாயை வல்லையெனக் காதல் சிறப்பக் கருதியது - மேதகைய பாம்படுதே ரல்குல் பயம்படுநீர் மானமான் 5தேம்படுவெண் டேர்மேற் செலல்" எனவும் வரும். பாங்கி பேதைமை யூட்டற்குச் செய்யுள்: 6"தேனுஞ் சுரும்புஞ் செறிதொங்கல் வாணன்றென் மாறைவெற்பா மானுங் கலையும் வடிக்கணை யாலெய்து மன்னுயிரும் ஊனுங் கவர்கின்ற தன்னையர் போலயி லொத்தகண்ணாள் தானும் பிறருள்ள நோயறி யாத தகைமையளே" எனவும்,
1. த. கோ. செ: 88. 2. தொல், பொருள், களவியல், 23ஆம் சூ. உரை மேற்கோள். 3. த. கோ. செ: 89. 4. இலக்கண விளக்கம், பொருள், அகத்திணையியல், 137ஆம் சூ. உரை மேற்கோள். 5. (பாடம்) 'தேம்படு தேர்மீது.' 6. த. கோ. செ: 90.
|