1"நறுந்தண் டகரம் வகுள மிவற்றை வெறும்புதல்போல் வேண்டாது வெட்டி- யெறிந்துழுது செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு நொந்தினைய வல்லளோ நோக்கு" எனவும் வரும். காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதற்குச் செய்யுள்: 2"வருநீர் வனமுலை மங்கைநல் லாய்செங்கை வாணன்வையை தருநீர் மலிவயற் றஞ்சையன் னாளன்று தஞ்சமிலேன் அருநீர் நவையுறக் கண்மலர் நீர்தெளித் தாற்றினளால் இருநீர் நிலங்கொள்ளு மோவறி யாளென்னு மிவ்வுரையே" எனவும், 3"அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன மணங்கமழ் பொழிற்குறி நல்கின ணுணங்கிழைப் பொங்கரி பரந்த வுண்கண் அங்கலுழ் மேனி யசையிய லெமக்கே" எனவும் வரும். பாங்கி முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறற்குச் செய்யுள்: 4"செறிவளர் காவி வயற்றஞ்சை வாணன் சிறுமலைமேல் நெறிவளர் வார்குழ னேரிழை யாளன்ன நீர்மையளேற் குறிவளர் காவின்முன் கூடிய வாறின்னுங் கூடுகநீ கறிவளர் சாரல்வெற் பாபிற ராலென்ன காரியமே" என வரும். தன்னிலை தலைவன் சாற்றற்குச் செய்யுள்: 5"உரைத்தென் பிறவந்தப் பைந்தொடி யாக முறாவிடில்வெண் டிரைத்தென் கடன்முத்துந் தென்மலைச் சந்துஞ் செழும்பனிநீ ரரைத்தென் புருகமெய் யப்பினும் வெப்ப மறாதினிநின் வரைத்தென் கருமமெல்லாந்தஞ்சை வாணன் வரையணங்கே" எனவும்,
1. திணைமாலை நூற். செ: 24. 2. த. கோ. செ: 91. 3. ஐங்குறு. செ: 174. 4. த. கோ. செ: 92. 5. த. கோ. செ: 93.
|