1"தோளுங் கூந்தலும் பலபா ராட்டி வாழ்த லொல்லுமோ மற்றே செங்கோற் குட்டுவன் றொண்டி யன்ன வெற்கண்டு நயந்துநீ நல்காக் காலே" எனவும் வரும். பாங்கி உலகியலுரைத்தற்குச் செய்யுள்: 2"விரையக நாண்மலர் மெல்லியன் மாதை விரும்பினையேல் வரையக நாட வரைந்துகொ ணீதஞ்சை வாணன்முந்நீர்த் தரையக நான்மறைக் கேள்வியர் வேள்வியர் சான்றவர்தம் உரையக நாடிமுன் னிட்டன தாகு முலகியலே" எனவும், 3"கோடீ ரெல்வளைக் கொழும்பல் கூந்தல் ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின் தெண்கழிச் சேயிறாப் படூஉந் தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ" எனவும் வரும். தலைமகன் மறுத்தற்குச் செய்யுள்: 4"வெண்டா மரைமங்கை காதல னாகிய வேதியன்பால் உண்டா கியதொல் லுலகிய லாலுங்க ளாரணங்கை வண்டார் குழலி வரைந்துகொள் வேன்றஞ்சை வாணன்வண்மை கண்டா லருளுள்ள நீயென தாருயிர் காத்தபின்னே" என வரும். பாங்கி யஞ்சி யச்சுறுத்தற்குச் செய்யுள்: 5"மல்லார் புயன்றஞ்சை வாணன்வெற் பாவெமர் வந்தி யினிக் கல்லார் வியன்புனங் காவல் விடாரவர் காணின்மிகப் பொல்லா திருண்டது போதுமற் றியாங்களும் போதுமிங்கு நில்லா தெழுந்தரு ணீயுமிப் போது நெடுந்தகையே" எனவும்,
1. ஐங்குறு. செ: 178. 2. த. கோ. செ: 94. 3. ஐங்குறு. செ: 196. 4. த. கோ. செ: 95. 5. த. கோ. செ: 96.
|