108

1"விரைகமழ் சாரல் விளைபுனங் காப்பார்
வரையிடை வாரனீ யைய-வுரைகடியர்
வில்லினர் வேலர் விரைசெலு மம்பினர்
கல்லிடை வாழ்ந ரெமர்"

எனவும் வரும்.

தலைமகன் கையுறை புகழ்தற்குச் செய்யுள்:

2"சிமையார் மலையத் தமிழ்த்தஞ்சை வாணன் சிறுமலைமேல்
அமையா கியதடந் தோளன்ன மேயணி யத்தகுமால்
உமையா ளிறைவன் பயில்கயி லாயத்து மும்பர்தங்கும்
இமையா சலத்துமெல் லாமில்லை யானிக ரித்தழைக்கே"

எனவும்,

"கண்ணி தகைசிறந் தனவே தண்ணென்
பூந்தழை செவ்விய போலும் வாங்கிருங்
கூந்தலு மல்குலும் பொலிய
வேந்திழை கொள்கயாம் விழைகுவம் பெரிதே"

எனவும் வரும்.

பாங்கி கையுறை மறுத்தற்குச் செய்யுள்:

3"மல்குற்ற தண்புனல் சூழ்தஞ்சை வாணன் மலயவெற்பா
நல்குற் றவையிந்த நாட்டுள வன்மையி னன்னுதலாள்
அல்குற் றடத்தெமர் கண்டா லயிர்ப்ப ரதுவுமன்றிப்
பல்குற் றமும்வரு மால்யாங்கள் வாங்கேம் பசுந்தழையே"

எனவும்,

4"நொதும லாளர் கொள்ளா ரிவையே
யெம்மொடு வந்து கடலாடு மகளிரு
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்
உடலகங் கொள்வோ ரின்மையின்
தொடலைக் குற்ற சிலபூ வினரே"

எனவும் வரும்.


1. திணைமொழி ஐம்பது: 5.

2. த. கோ. செ: 98.

3. த. கோ. செ: 98.

4. ஐங்குறு. செ: 187.