தலைமகன் ஆற்றா நெஞ்சினோடவன் புலத்தற்குச் செய்யுள்: | 1"உழையும்வெங் காளமும் போலுங்கண் ணாளொரு | | காலமுள்ளங் | | குழையுமெம் பாலென்று கொண்டநெஞ் சேகலிக் | | கோடைமண்மேல் | | மழையுமந் தாரமும் வந்தன வாணன்றென் | | மாறையின்மாந் | | தழையுநம் போலிங்ங னேகவின் வாடத் | | தவஞ்செய்ததே" | எனவும் வரும். பாங்கி ஆற்றுவித் தகற்றற்குச் செய்யுள்: 2"சோலையில் வாழிளந் தோகையன் னாளைத் தொழுதிரந்திம் மாலையில் வாழி வரங்கொள்வல் யான்தஞ்சை வாணன்வெற்ப வேலையில் வார்துகி ரன்னவெய் யோன்வெயில் வெற்பின்மல்குந் காலையில் வாபின்னை யென்கைய தாகுநின் கையுறையே" எனவும், 3"நாள்வேங்கை பொன்சொரியு நன்மலை நன்னாட கோள்வேங்கை போற்கொடிய ரெம்மையர்-கோள்வேங்கை யன்னையா னீயு மருந்தழையா மேலாமைக் கென்னையோ நாளை யெளிது" எனவும் வரும். இவற்றுள், தலைமகன் கூற்றாயினவெல்லாம் இரந்து பின்னிற்றற்கும் பாங்கிகூற்றாயினவெல்லாஞ் சேட்படுத்தற்கும் உரிய எனக் கொள்க. (28) மடற் கூற்றும், மடல் விலக்கும் 145. இறந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தலும் பாங்கிக் குலகின் மேல்வைத் துரைத்தலும் அதனைத் தன்மேல் வைத்துச் சாற்றலும் பாங்கி தலைமக ளவயவத் தருமை சாற்றலும் தலைமகன் தன்னைத் தானே புகழ்தலும்
1. த. கோ. செ: 99. 2. த. கோ. செ: 100. 3. திணைமாலை நூற்: 29.
|