110

அலர்முலைப் பாங்கி அருளியல் கிளத்தலும்
கொண்டுநிலை கூறலும் என்றிவை யேழும்
மடற்கூற் றிற்கு மடல்விலக் கிற்குங்
கடவ என்மனார் கற்றறிந் தோரே.

(இ - ள்.) இதுவுமது. இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல் முதலாகப் பாங்கி கொண்டுநிலை கூறல் ஈறாகச் சொல்லப்பட்ட ஏழுந் தலைமகன் மடற்கூற்றிற்குந் தோழி மடல் விலக்கிற்கும் உரிய கிளவி என்று சொல்லுவர் கற்றுணர்ந்தோர் என்றவாறு.

பாங்கியை இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தற்குச் செய்யுள்:

1"திருந்தார் தொழுங்கழற் சேயன்ன வாணன்றென்

மாறைவெற்பி

லருந்தா வமுதன்ன வஞ்சொனல்லாரழ

கார்குழைதோய்

பெருந்தாரை வேல்விழி தந்தவெங் காமப்

பிணிதனக்கு

மருந்தா வதுநெஞ்ச மேயில்லை வேறு

மடலன்றியே"

எனவும்,

2"காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி"

எனவும் வரும்.

பாங்கிக்குத் தலைமகன் மடலேற்றினை உலகின்மேல் வைத்துனரத்தற்குச் செய்யுள்:

3"விரையூர் குழலியர் தந்தசிந் தாகுல வெள்ள நிறைக்
கரையூர் பொழுதிளங் காளையர் தாங்கிழி கைப்பிடித்துத்
தரையூர் தொறும்பெண்ணை மாமட லூர்வர் தவிர்ந்துபின்னும்
வரையூர்வர் தஞ்சையர் கோன்வாணன் மாறையில் வாணுதலே"

எனவும்,



1 த. கோ. செ: 101.

2. திருக்குறள், 1131.

3. த. கோ. செ: 102.