111

1"மாவென மடலு மூர்ப பூவெனக்
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே"

எனவும் வரும்.

அம் மடலேற்றினைத் தலைமகன் தன்மேல் வைத்துச் சாற்றற்குச் செய்யுள்:

2"வன்பணி போனிலந் தாங்கிய வாணன்றென்

மாறைவெற்பின்

மின்பணி பூண்முலை மெல்லிய லீர்குறை

வேண்டியுங்கண்

முன்பணி வேனின்று நாளைவெண் பூளை

முகிழெருக்கோ

டென்பணி வேன்மடன் மேல்வரு வேனிவை

யென்பணியே"

எனவும்,

3"தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு
மாலை யுழக்குந் துயர்"

எனவும் வரும்.

பாங்கி, தலைமகள் அவயவத்தருமை சாற்றற்குச் செய்யுள்:

4"தொடையே யெருக்கென்பு நீயணிந் தாலென்னை

சூல்வளையூர்

மடையேய் வயற்றஞ்சை வாணன்வெற் பாமல

ரோன்வகுத்த

படையே நயனம் படைத்தபொற் பாவை

படியெடுக்க

விடையே தெனத்தெரியா துரை யாணி

யிடவரிதே"

எனவும்,

"கம்ப மதயானைக் கண்டன் கடற்றொண்டிக்
கொம்பர் விழிக்குவமை கூறுவதே-னம்பு
கருநீலஞ் செங்குவளை காலன்வே லாலம்
பெருநீர்மை தோற்றழிந்த பின்"

எனவும் வரும்.


1. குறுந். செ: 17.

2. த. கோ. செ: 103.

3. திருக்குறள், 1135.

4. த. கோ. செ: 104.