தலைமகன் தன்னைத்தானே புகழ்தற்குச் செய்யுள்: 1"நறையல ராவிரைப் போதிசை யாதிசை நான்முகத்து மறையல ராவந்த மான்மகன் யான்றஞ்சை வாணன்வையைத் துறையல ராவியங் காவியங் கண்ணி துணிந்துசொல்லுங் குறையல ரார்குழ லாட்கினித் தீரக் குறையில்லையே" எனவும் வரும். பாங்கி அருளியல் கிளத்தற்குச் செய்யுள்: 2"செயலார் குடம்பையிற் செந்தலை யன்றிற் சினையுளபைங் கயலார் வனவெண் குருகின்வண் பார்ப்புள கைக்கடங்கா மயலார் களிற்றண்ணல் வாணன்றென் மாறைவையைத்துறைவா வியலா தருளுடை யார்க்கென்று மாமட லேறுவதே"
எனவும், 3"வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே யவையினும் பலவே சிறுகருங் காக்கை யவையினும் அவையினும் பலவே குவிமட லோங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூக்கணங் குரீஇக் கூட்டுள சினையே" எனவும் வரும். பாங்கி கொண்டுநிலை கூறற்குச் செய்யுள்: | 4"வெண்டோ டணிமுகப் பைங்குரும் பைக்கொங்கை | | வெய்யவுண்கட் | | கண்டோர் விரும்புங் கரும்பனை யாரைக் | | கடற்றுறைவா | | கொண்டோர் குறைமுடி கொம்பனை யார்நின் | | குறைமறுத்தால் | | வண்டோ லிடுந்தொங்க லான்வாணன் மாறை | | வளநகர்க்கே" | எனவும், 5"முளவுமா வல்சி யெயினர் தங்கை யிளமா வெயிற்றிக்கு மிந்நிலை யறியச் சொல்லினெ னிரக்கு மளவை வெள்வேல் விடலை விரையா தீமே" எனவும் வரும்.
1. த. கோ. செ: 105. 2. த. கோ. செ: 106. 3. தொல். பொருள், களவியல், 20ஆம் சூ. உரைமேற்கோள். 4. த. கோ. செ: 107. 5. ஐங்குறு. செ: 364.
|