113

இது தலைமகன் நிலையைத் தாங்கிக்கொண்டு------------நிற்றலாற் கொண்டு நிலையாயிற்று. இச் சூத்திரத்துள் தலைமகன் கூற்றாயினவெல்லாம் மடற் கூற்றிற்கும் பாங்கி கூற்றாயினவெல்லாம் மடல் விலக்கிற்கும் உரியவெனக் கொள்க. இவ்விரண்டு சூத்திரத்துள்ளும் எடுத்தோதப்பட்ட கிளவிகள் இவ்வியலுட் பாங்கி கூற்றுள்:

1"குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப்
பெருமையிற் பெயர்ப்பினு முலகுரைத் தொழிப்பினும்
அருமையி னகற்சியு மவளறி வுறுத்துப்
பின்வர வென்றலும் பேதைமை யூட்டலும்
முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலும்
அஞ்சியச் சுறுத்தலு முரைத்துழிக் கூட்டமோ
டெஞ்சாது கிளந்த விருநான்கு கிளவியும்"

என்பதனாலும், தலைமகன் கூற்றுள்:

2"தண்டா திரப்பினு மற்றைய வழியுஞ்
சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினும்
அறிந்தோ ளயர்ப்பி னவ்வழி மருங்கிற்
கேடும் பீடுங் கூறலுந் தோழி
நீக்கலி னாகிய நிலைமையு நோக்கி
மடன்மா கூறு மிடனுமா ருண்டே"

என்பதனாலும்,

3"இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி
நிரம்ப நீக்கி நிறுத்த லன்றியும்
வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலும்
நல்வகை யுடைய நயத்திற் கூறியும்
பல்வகை யானும் படைக்கவும் பெறுமே"

என்பதனாலும் கொள்ளப்பட்டன.

(29)

குறை நேர்தலும் மடற்கூற்றொழிதலும்

146. தலைவி யிளமைத் தன்மை பாங்கி
தலைவற் குணர்த்தலும் தலைவன் றலைவி
வருத்திய வண்ண முரைத்தலும் பாங்கி


1. தொல், பொருள், களவியல், சூ: 23.

2. தொல், பொருள், களவியல். சூ: 11.

3. தொல், பொருள், பொருளியல், சூ: 43.