1"குன்றக் குறவன் காதன் மடமகள் வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி வளையண் முளைவா ளெயிற்றள் இளைய ளாயினு மாரணங் கினளே" எனவும் வரும்.
பாங்கி தலைமகள் செவ்வியருமை செப்பற்குச் செய்யுள்: 2"ஏடா ரலங்க லிலங்கிலை வேல்வெற்ப வேழுலகும் வாடாமல் வந்தருள வாணன்றென் மாறையில் வல்லியன்னாள் சூடாள் குவளையு முல்லையஞ் சூட்டுஞ் சுனையும்பந்து மாடா டனக்கென்கொ லோவடி யேன்சென் றறிவிப்பதே" எனவும், 3"நெறிநீ ரிருங்கழி நீலமுஞ் சூடாள் பொறிமாண் வரியலவ னாடலு மாடாள் சிறுநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாட்கு எறிநீர்த்தண் சேர்ப்பயா னென்சொல்லிச் செல்கோ" எனவும் வரும். தலைவன் தலைவி செவ்வியெளிமை செப்பற்குச் செய்யுள்: 4"தேன்வந்த வாயிதழ்ச் சேயிழை யாயிளஞ் செவ்விநவ்வி மான்வந்த வாள்விழி வஞ்சிக்கு நீதஞ்சை வாணன்வெற்பில் யான்வந்த வாசென் றியம்புதி யேலவர் யாவரென்னாள் தான்வந் தவாவுட னேநின்னை யாரத் தழீஇக்கொளுமே" எனவும், 5"நீர்வள ராம்பற் றூம்புடைத் திரள்கா னாருரித் தன்ன மதனின் மாமைக் குவளை யன்ன வேந்தெழின் மழைக்கட் டிதலை யல்குற் பெருந்தோட் குறுமகட் கெய்தச் சென்று செப்புநர்ப் பெறினே யிவர்யா ரென்குவ ளல்லண் முணாஅ தத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி யெறிமட மாற்கு வல்சி யாகும் வல்வி லோரி கான நாறி"
1. ஐங்குறு. செ: 256.
2. த. கோ. செ: 110. 3. தொல், பொருள், களவியல், 23ஆம் சூ. உரைமேற்கோள்.
4. த. கோ. செ: 111. 5. நற்றிணை. செ: 6.
|