116

யிரும்பல் லொலிவருங் கூந்தல்
பெரும்பே துறுவள்யாம் வந்தன மெனவே"

எனவும் வரும்.

பாங்கி என்னை மறைப்பின் எளிதென நகுதற்குச் செய்யுள்:

1"மண்ணும் பயில்வித்து மொன்றினுஞ் சந்திர வாணன்வெற்பா
நண்ணும் புனலின்றி யங்குரி யாதுங்க ணல்வினையாற்
கண்ணுங் கருத்துங் கலந்தன வாயினுங் கண்ணினும்முள்
எண்ணுங் குறையென்னை நீர்மறைத் தாலிங் கியல்வதன்றே"

என வரும்.

அந்நகை பொறாஅது அவன் புலம்பற்குச் செய்யுள்:

2"வெவ்வே லெறிந்த விழுப்புண்ணின் மீட்டும் வெதுப்பியதோர்
செவ்வே னுழைப்பவர் சீலமன் றோதிரு வேமருவார்
வைவே லமர்வென்ற வாணன்றென் மாறை மயில்பொருட்
நைவேனை யஞ்சலென் னாதின்ன வாறு நகைக்கின்றதே"

எனவும்,

3"நயனின் மையிற் பயனிது வென்னாது
பூம்பொறிப் பொலிந்த வழலுமி ழகன்பைப்
பாம்புயி ரணங்கி யாங்கு மீங்கிது
தகாஅது வாழியோ குறுமகணகாஅ
துரைமதி யுடையுமென் னுள்ளஞ் சாரற்
கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போலச்
சேயரி பரந்த வாயிழை மழைக்க
ணூறாஅ நோக்க முற்றவென்
பையு ணெஞ்ச முய்யு மாறே"

எனவும் வரும்.

பாங்கி தலைமகனைத் தேற்றற்குச் செய்யுள்:

4"தன்கண் ணனையதன் பாங்கிய ருள்ளுந் தனக்குயிரா
மென்கண் ணருள்பெரி தெம்பெரு மாட்டிக் கிகன்மலைந்தார்
வன்கண் ணமர்வென்ற வாணன்றென் மாறையில் வந்தவளாற்
புன்கண் ணடையலை நீயினி வாடல் புரவலனே"

என வரும்.


1. த. கோ. செ: 112.

2. த. கோ. செ: 113.

3. நற்றிணை: 75.

4. த. கோ. செ: 114.