117

பாங்கி கையுறை ஏற்றற்குச் செய்யுள்:

1"ஒலிதெண் கடல்புடை சூழுல கேழினு மூழ்வினைதான்
வலிதென் பதனை வயக்கிய தாற்றஞ்சை வாணன்வெற்பா
கலிதெங்கு மாவுங் கமுகும் பலாவுங் கதலிகளும்
பொலிதென் பொதியிலின் மேற்சந்த னாடவிப் பூந்தழையே"

என வரும்.

கிழவோன் ஆற்றற்குச் செய்யுள்:

2"மைப்போ தணிதொங்கல் வாணனொன் னாரென

வல்வினையேற்

கப்போ தடைந்த வருந்துயர் நீங்கி

யரும்பியபொற்

செப்போ திளமுலை யாணகை வாண்முகத்

திங்களைக்கண்

டிப்போ திளகிய தாலிந்து காந்தங்கொ

லென்னெஞ்சமே"

எனவும்,

3"உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொ
லொல்லை யுணரப் படும்"

எனவும் வரும்.

இதனுள், பாங்கி கூற்றாயினவெல்லாம் குறைநேர்தற்கும், தலைமகன் கூற்றாயினவெல்லாம் மடற்கூற்றொழிதற்கும் உரியனவெனக் கொள்க. இதனுள் எடுத்தோதப்பட்ட கிளவிகள்:

4"பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினு
மன்புற்று நகினு மவட்பெற்று மலியினும்
ஆற்றிடை யுறுதலு மவ்வினைக் கியல்பே"

என்பதனாற் கொள்ளப்பட்டன. இவற்றுள் சான்றோர் செய்யுள் இல்லாதவற்றிற்குச் சூத்திரந்தன்னையே இலக்கியமாகக் கொள்க.

(30)

குறை நயப்பித்தலும் மறுத்தலும்

147. இறைவன் றனக்குக் குறைநேர் பாங்கி
இறைவிக் கவன்குறை உணர்த்தலும் இறைவி


1. த. கோ. செ: 115.

2. த. கோ. செ: 116.

3. திருக்குறள், 1096.

4. தொல், பொருள், களவியல், சூ. 12.