"தூய்மை சான்ற தொல்குடித் தோன்றி வாய்மை நாவின் மதியான் போல உயர்தவ முனிவர் சார்வாப் பெயரா நிலையது பிறங்குதிரு மலையே" எனவும் வரும். பாங்கி இறையோற் கண்டமை பகர்தற்குச் செய்யுள்: 1"திவாகர னேயன்ன பேரொளி வாணன்றென் மாறைநன்னாட் டுவாமதி போலு மொளிர்முகத் தாயென் னொளிப்பதும்மே லாவாவின னாகியொர் மானை வினாவிவந் தானையின்றிக் கவானுயர் சோலையின் வாய்வண்ட லாருழைக் கண்டனமே" எனவும், 2"வளையணி முன்கை வாலெயிற் றமர்நகை யிளைய ராடுந் தளையவிழ் கானற் குறுந்துறை வினவி நின்ற நெடுந்தோ ளண்ணற் கண்டிகும் யாமே" எனவும் வரும். பாங்கியைத் தலைவி மறைத்தற்குச் செய்யுள்: | 3"செவ்வண்ண வேல்விழி யாய்தஞ்சை வாணன்றென் | | மாறைநன்னாட் | | டிவ்வண்ண நீசொல்வ தேற்பதன் றானின் | | னிடையெனத்தா | | மெய்வண்ணம் வாடிவெறிதே வருந்தி | | விருந்தினராய்க் | | கைவண்ண வார்தழை கொண்டுசென் றார்தமைக் | | கண்டுகண்டே" | எனவும், 4"தெருவின்கண் காரண மின்றிக் கலங்குவார்க் கண்டுநீ வாரண வாசிப் பதம்பெயர்த்த லேதில நீநின்மேற் கொள்வ தெவன்" எனவும் வரும்.
1. த. கோ. செ: 119.
2. ஐங்குறு. செ: 198.
3. த. கோ. செ: 120. 4. கலி. செ: 60.
|