பாங்கி என்னை மறைப்பதென்னெனத் தழாஅற்குச் செய்யுள்: | 1"பரக்கின்ற செவ்விதழ்ப் பங்கயப் பாதம் | | பணிந்துநின்னை | | யிரக்கின்ற தொன்றையு மெண்ணலை யாலெழு | | பார்முழுதும் | | புரக்கின்ற கோன்றஞ்சை வாணன் பொதியிலிற் | | பொய்த்தென்னைநீ | | கரக்கின்ற தென்னைகொ லென்னுயி ராகிய | | காரிகையே" | எனவும், "வாள்போழ் வானத்து வயங்குபு சிதறிக் கோள்சேர்ந்து கிடந்த குழவிப் பிறையேய்ப்பப் பொறியணி திலக நறுநுதல் வியர்ப்பப் பொற்பப் புனைந்த நற்போ தவிழ்ந்து நறிய நாறுநின் கூந்தலு மன்றி யருங்கடி மூதூர் மருங்கிற் போகி விசும்புதொட நிவந்த வியன்பெருங் கோயில் பசும்பொ னன்கலம் பரிசி லாக வடையார்த் துறந்த வருந்திற லயிலவன் படைத்தலை பெயர்த்த கறையெஃகம் போலக் கடைசிவந் தனவே கருங்கவன் மழைக்கண் ணென்னொடு சூழா யாகி னின்னோ டாட லஞ்சுவ றோழி நீடுறை நிறைகட லுமிழ்ந்த நீணீர்ப் பறைவா யோதத்துப் பனித்திரை பொருத கால்சாய் புன்னைக் காமர் புதுப்பூ வுதிர நூல்கான் முத்தி னுண்ணிதி னுறைய நெடும்பணைப் பள்ளி வீழு மிடுமண லெக்கர்க் கானல் யானே" எனவும் வரும். பாங்கி கையுறை புகழ்தற்குச் செய்யுள்: 2"சூடத் தகுவன வல்லவெல் லாம்படி சொல்லினுந்தாம் வாடத் தகுவன வல்லநல் லாய்தஞ்சை வாணன்வெற்பர் தேடத் தகுவன வல்லதல் லாத சிலம்பினுள்ளார் நாடத் தகுவன வல்லகல் லார நறுந்தழையே" எனவும்,
1. த. கோ. செ: 121. 2. த. கோ. செ: 122.
|