இதுவுமது, (இ - ம்.) தோழி கிழவோன் துயர்நிலைகிளத்தல் முதலாகக் கையுறையேற்றல் ஈறாக முறையே சொல்லப்பட்ட ஆறும் வலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தற்கும் மெலிதாகச் சொல்லி மேவற்கும் உரிய கிளவிகளாம் என்றவாறு. தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தற்குச் செய்யுள்: 1"வனையுங் குழல்வஞ்சி வாணன்றென் மாறை வரைக்களிறு தினையுந் தழையும் பிடியொடு மேய்ந்து தெளிந்தவின்னீற் சுனையுண் டசோக நிழற்சோக நீங்கித் துயில்வதுகண் டெனையிங் கடைக்கணி யாவினை யாநிற்ப ரேதிலரே" எனவும், "பருவர னெஞ்சமேவ றவிராது செருவே லுதியன் சேண்விளங்கு முசிறி கருங்கழிக் காவி யொடுகலாங் கருதிய பெருங்கண் மாயோளே நாங்கடி கொண்ட செந்தினை கவர்ந்த பைங்கண் வேழங் கருவரைப் பிரசங் கையின் வாங்கி ஈயின மிரிய வீசி வயவுப் பிடியின் வாயுறக் கொடுத்த செவ்வி நோக்கி யுருகு நெஞ்சமொடு நீடுநினைந் தருகுசென் ஞமலியு மென்னையு நோக்கிக் கழலொலி கரப்ப வொதுங்கி நிழலென நிற்ப னொருநினை நினைத்தே" எனவும் வரும். தோழி தலைமகனை மறுத்தற்கருமை மாட்டற்குச் செய்யுள்: | 2"கையுந் தழையுமுன் காண்டொறுங் காண்டொறுங் | | கட்டுரைத்த | | பொய்யுந் தொலைந்தன பூந்தழை போலரி | | போர்த்துநஞ்சு | | மையுங் கலந்துண்ட வாள்விழி யாய்தஞ்சை | | வாணன்வெற்பர் | | மெய்யுந் துவண்டதென் னான்முடியாது | | வெளிநிற்கவே" | எனவும்,
1. த. கோ. செ: 123. 2. த. கோ. செ: 124.
|