123

1"தேர்சே ணீக்கித் தமியனில் வந்துநும்
ஊர்யா தென்ன நணிநணி யொதுங்கி
முன்னாட் போகிய துறைவன் நெருநை
அகலிலை நாவ லுண்டுறை யுதிர்த்த
கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன்
றாழை வேரளை வீழ்துணைக் கிடூஉம்
அலவற் காட்டி நற்பாற் றிதுவென
நினைந்த நெஞ்சமொடு நெடிதுபெயர்ந் தோனே
யுதுக்காண் டோன்றுந் தேரே யின்று
நாமெதிர் கொள்ளா மாயிற் றானது
துணிகுவன் போலா நாணுமிக வுடையன்
வெண்மண னெடுங்கோட்டு மறைகோ
வம்ம வாழி கூறுமதியே நீயே"

எனவும் வரும்.

தோழி தலைமகள் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறற்குச் செய்யுள்:

2விடையான் மிசைவரு மேருவில் லானொடு மேழிவென்றிப்
படையா னொடும்வெம் பகைகொள் வதோபகல் போலு மெய்ம்மை
யுடையா னுயர்தஞ்சை வாணனொன் னாரென வொல்கியநுண்
ணிடையாய் பிறிதுகொ லோவறி யேன்வெற்ப ரெண்ணுவதே"

எனவும்,

3"மறவல் வாழி தோழி துறைவர்
கடல்புரை பெருங்கிளை நாப்பண்
மடல்புனைந் தேறிநிற் பாடும் பொழுதே"

எனவும் வரும்.

தோழி தலைவியை முனிதற்குச் செய்யுள்:

4"தூற்றா தலரை மறைப்பவர்க் கேகுறை சொல்லுகுற்ற
மேற்றா தொழியெனை யெம்பெரு மாட்டிசென் றேற்றவர்க்கு
மாற்றா தருள்செங்கை வாணன்றென் மாறையில் வந்துநெஞ்சம்
போற்றாது நின்றய லேன்சொன்ன தீங்கு பொறுத்தருளே"

எனவும்,



1. அகம். செ: 380.

2. த. கோ. செ: 125.

3. தொல், பொருள், 23 ஆம் சூ. உரை மேற்கோள்.

4. த. கோ. செ: 126.