124

1"மாயோ னன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோ னன்ன வயங்குவெள் ளருவி
யம்மலைக்கிழவோ னின்னயந் தென்றும்
வருந்தின னென்பதோர் வாய்ச்சொற் றேறாய்
நீயுங் கண்டு நுமரொடு மெண்ணி
யறிவறிந் தளவல் வேண்டு மறுதரற்
கரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பி னல்லது
நட்டுநா டார்தம் மொட்டியோர் திறத்தே"

எனவும் வரும்.

தலைவி பாங்கியை முனிதற்குச் செய்யுள்:

2"மற்றே தவர்நினை வார்தஞ்சை வாணன் வரையின் முந்நாட்
பொற்றேரின் வந்து புணர்ந்துசென் றார்தம் பொருட்டுநம்மைக்
குற்றேவன் மங்கை குறையிரந் தாளெனுங் குற்றமிந்நா
ளெற்றே தவறுநம் பாலில்லை யாகவு மெய்தியதே"

எனவும்,

3"விட்ட குதிரை விசைப்பி னன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாந்தற் படர்ந்தமை யறியான் றானும்
வேனி லானேறு போலச்
சாயின னென்பநம் மாணல நயந்தே"

எனவும் வரும்.

தலைவி பாங்கிதன்கைக் கையுறை யேற்றற்குச் செய்யுள்:

4"ஆற்றுந் தலைவ ரருந்துய ராற்றினு மாற்றிலனாண்
மாற்றும் புனையின் மயிலனை யாய்தஞ்சை வாணன்றெவ்விற்
போற்றுங் கொடுவினை யேன்புனை யாவிடிற் போந்தலரே
தூற்றுந் தழையென்றி தொன்றெங்ங னேவந்து தோன்றியதே"

எனவும்,

5"சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா
வலங்குகுலைக் காந்த டீண்டித் தாதுகக்
கன்றுதாய் மருளுங் குன்ற நாட
னுடுக்குந் தழைதந் தனனே யவையா



1. நற்றிணை. 32.

2. த. கோ. செ: 127.

3. குறு. செ: 74.

4. த. கோ. செ: 128.