முடுப்பின் யாயஞ் சுதுமே கொடுப்பிற் கேளுடைக் கேடஞ் சுதுமே யாயிடை வாடல கொல்லோ தாமே யவன்மலைப் போருடை வருடையும் பாயச் சூருடை யடுக்கத்த கொயற்கருந் தழையே. எனவும் வரும். இதனுட் பாங்கி கூற்றாயின வெல்லாங் குறைநயப்பித்தற்கும், தலைவி கூற்றாயினவெல்லாங் குறைநேர்தற்கும் உரிய கிளவியெனக் கொள்க. (32) கூட்டல், கூடல், ஆயங்கூட்டல், வேட்டல் 149. இறைவி கையுறை யேற்றமை பாங்கி இறைவற் குணர்த்தலும் குறியிடங் கூறலும் குறியிடத் திறைவியைக் கொண்டு சேறலும் குறியிடத் துய்த்து நீங்கலும் இறையோன் இடத்தெதிர்ப் படுதலும் இயைதலும் புகழ்தலும் விடுத்தலும் பாங்கி மெல்லியற் சார்ந்து கையுறை காட்டலும் மையுறை கண்ணியைப் பாங்கிற் கூட்டலும் நீங்கித் தலைவற் கோம்படை சாற்றலும் உலகியன் மேம்பட விருந்து விலக்கலும் பெருந்தகை விருந்திறை விரும்பலும் 1என்னத் தெரிந்தபன் மூன்றுங் கூட்டல் முதலா வேட்டல் ஈறாப் பாங்கிக்கு வகுத்த நான்கிற்கு முரிய. இதுவும் அது. (இ - ம்.) இறைவி கையுறை யேற்றமை பாங்கி யிறைவற்குணர்த்தல் முதலாகத் தலைமகன் விருந்திறை விரும்பல் ஈறாக ஆராய்ந்த பதின்மூன்றும் கூட்டலும், கூடலும், பாங்கிற்கூட்டலும், வேட்டலும் என நான்கிற்கும் உரியவாம் என்றவாறு.
1. 'எனமுறை' என்பதும் பாடம்.
|