127

பாங்கி தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்கற்குச் செய்யுள்:

1"கண்சாயல் கையுருக் கொண்டுதன் வேன்மயில் காந்தள்வள்ளி
யெண்சாய வென்றளை யென்றுசெவ்வேளிவ ரும்பவளம்
வண்சா யொசிக்கும் வயற்றஞ்சை வாணன் மலயமராத்
தண்சாயை நின்றணங் குந்தைய னீநிற்க சாரலிலே"

எனவும்,

2"செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பின் செங்கோட்டியானைக்
கழறெடிச் சேஎய் குன்றங்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே"

எனவும் வரும்.

இறைவி இறையோனிடத்து எதிர்ப்படுதற்குச் செய்யுள்:

3"முயங்கிய நூபுரப் பங்கயத் தாளு முலைசுமந்து
தயங்கிய நுலிடை தானுமென் போலத் தளர்வுறுமிங்
கியங்கிய வாறென் மனத்திரு ணீக்கவென் றேதுணிந்தோ
வயங்கிய சீருடை யான்வாணன் மாறை மணிவிளக்கே"

என வரும்.

புணர்ச்சியின் மகிழ்தற்குச் செய்யுள்:

4"தருந்தாரு வஞ்சுங் கொடையுடை யான்றஞ்சை

வாண னின்சொற்

செருந்தார் பசுந்தமிழத் தென்வரை மேற்செம்பொன்

மேருவெற்பாற்

கருந்தாரை நஞ்சுமிழ் வாசுகி யால்வெண்

கடல்கடைந்து

வருந்தா வமுதளித் தாள்வல்ல ளாமிம்

மடக்கொடியே"

என வரும்.



1. த. கோ. செ: 132.

2. குறு. செ : 1. இதுகுறுந்தொகையில் தோழி கையுறை மறுத்தது என்றுகொள்ளப்பட்டது.

3. த. கோ. செ: 133.

4. த. கோ. செ: 134.