128

புகழ்தற்குச் செய்யுள்:

1"மயனார் விதித்தன்ன மாமதில் சூழ்தஞ்சை வாணன்வெற்பிற்
பயனார் பயோதரப் பாவையன் னீர்பசும் பொற்குழைதோய்
நயனாத விரந்த்து நஞ்சுநும் வாயிதழ் நல்லமுது
மயனார் படைத்தில ரேலடங் காதவ் வரனுக்குமே"

எனவும் வரும்.

தலைமகளைத் தலைமகன் விடுத்தற்குச் செய்யுள்:

2"நேயம் புகலிட மின்றிநின் பால்வந்து நின்றதுபோ
லாயம் புகல வடைந்தரு ணீயடை யாதமன்னர்
வாயம் புகவில் வணங்கிய வாணன்றென் மாறைநன்னீர்த்
தோயம் புகரிணை வேல்விழி யாய்நின் றுணையுடனே"

எனவும் வரும்.

பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டற்குச் செய்யுள்:

3"பொய்போ லிடைநின் விழிபோற் குவளையம் போதிவைநின்
மெய்போ லசோக மிளிர்பூந் தழையிவை மெல்லியனின்
கைபோற் கவின்கொள்செங் காந்தளம் போதிவை கண்டருள்யான்
மைபோற் குழலிதந் தேன்றஞ்சை வாணன் வரையினின்றே"

எனவும்,

"நறும்பூங் கண்ணியும் பெருந்தண் கோதையு
நகைவாய்ப் பிணையலு முகைவாய்ச் சூட்டும்
புனைந்தனை யருளல் வேண்டுஞ்
சினங்கொ டானைச் செழுமட மானே"

எனவும் வரும்.

பாங்கி தலைவியைப் பாங்கிற் கூட்டற்குச் செய்யுள்:

4"குனிநாண் மதிநுதற் கோகில மேநின் குழலிலெல்லாப்
பணிநாண் மலரும் பறித்தணிந் தேனிந்தப் பார்மடந்தை
தனிநா யகன்றஞ்சை வாணன்றன் சாரற் றனித்து நில்லா
தினிநா மகன்றிளை யார்விளை யாடிட மெய்துதுமே"



1. த. கோ. செ: 135.

2. த. கோ. செ: 136.

3. த. கோ. செ: 137.

4. த. கோ. செ: 138.