பாங்கி தலைவியை நீங்கித் தலைவற்கோம்படை சாற்றற்குச் செய்யுள்:
 1"சின்னாண் மலர்க்குழல் காரண மாச்செவ்வி பார்த்துழன்று  பன்னா ளுரைத்த பணிமொழி நோக்கிப் பழிநமக்கீ  தென்னா திடைப்பட்ட வென்னிலை நீமற வேலிறைவா  தன்னாக மெய்ப்புக ழான்தஞ்சை வாணன் றமிழ்வெற்பிலே" எனவும், 2"அவரை பொருந்திய பைங்குர லேனற்  கவரி மடமா கதூஉம் படர்சாரற்  கானக நாட மறவல் வயங்கிழைக்  கியானிடை நின்ற புணை" எனவும் வரும். பாங்கி தலைமகனை உலகியன் மேம்பட விருந்து விலக்கற்குச் செய்யுள்: 3"வலைப்பெய்த மான்றசை தேன்றோய்த் தருந்தி மரைமுலைப்பா  லுலைப்பெய்த வார்தினை மூரலு முண்டுளங் கூருவகை  தலைப்பெய்த நாளனை யான்றஞ்சை வாணன் சயிலத்தெம்மூ  ரிலைப்பெய்த தாழ்குரம் பைத்தங்கி னாலுமக் கென்வருமே" எனவும், 4"பன்னா ளெவ்வந் தீரப் பகல்வந்து  புன்னையம் பொதும்பி னின்னிழற் கழிப்பி  மாலை மால்கொள நோக்கிப் பண்ணாய்ந்து  வலவன் வண்டே ரியக்க நீயுஞ்  செலவுவிருப் புறுத லொழிகதில் லம்ம  செல்லா நல்லிசைப் பொலம்பூட் டிரையன்  பல்பூங் கானற் பவத்திரி யனவிவ  ணல்லெழி லின்னலந் தொலைய வொல்லெனக்  கழியே யோத மல்கின்று வழியே  வள்ளெயிற் றரவொடு வயமீன் கொட்குஞ்  சென்றோர் மன்ற மான்றின்று பொழுதென  நின்றிறத் தவலம் வீட வின்றிவண்  சேப்பி னெவனோ பூங்கேழ் புலம்ப  பசுமீ னொடுத்த வெண்ணென்மாத் தயிர்மிதி  மிதவை மாவா குநவே நினக்கே
  
 1. த. கோ. செ: 139.  2. ஐந்திணை எழுபது, செ: 1. 3. த. கோ. செ: 140.  4. அகம். செ: 340. 
 |