133


வூதுவண் டிமிருங் கோதை மார்பின்
மின்னிவர் கொடும்பூட் கொண்கனொ
டின்னகை மேவநா மாடிய பொழிலே"

எனவும் வரும்.

பாங்கி புலம்பற்குச் செய்யுள்:

1"காலையம் போருக வாண்முகத் தாளன்பர் கையகல
மாலையம் போது வருவித்த நீர்தஞ்சை வாணன்றெவ்வ
ராலையம் போலுங்க ளாதவன் கோயி லழல்கொளுந்த
வேலையம் போடுழல் வீர்பரி காளென்றும் வெய்துயிர்த்தே"

எனவும்,

2"பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ணகத் தெழுதிய குரீஇப் போலக்
கோல்கொண் டலைப்பப் படீஇயர் மாதோ
வீரை வேண்மான் வெளியன் றித்தன்
முரசுமுதற் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோ டியம்ப நுண்பனி யரும்பக்
கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்
தவல நெஞ்சினம் பெயர வுயர்திரை
நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்ப
னோடுதேர் நுண்ணுக நுழைத்த மாவே"

எனவும் வரும்.

தலைவன் நீடத் தலைவி வருந்தற்குச் செய்யுள்:

3"ஆராத வின்ப விடந்தொறுநீங்கிய வாயமென்பால்
வாராத முன்னம் வருகில ராற்றஞ்சை வாணன்வெற்பிற்
கூரா தரநல்கி வல்வினை யேனலங் கொள்ளை கொண்டு
தேரா தவனுடனேநென்னன் மாலையிற் சென்றவரே"

எனவும்,

4"இருடிணிந் தன்ன வீர்ந்தண் கொழுநிழல்
நிலவுகுவித் தன்ன வெண்மண லொருசிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப


1. த. கோ. செ: 143.

2. நற்றிணை, செ: 58 ('செருமுது' என்றும் பாடம்)

3. த. கோ. செ: 144.

4. குறு. செ: 123.