134

வின்னும் வாரார் வரூஉம்
பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே"

எனவும் வரும்.

தலைவியைப் பாங்கி கழறற்குச் செய்யுள்:

1"சிறந்தார் தெரிந்த செழுந்தமிழ் வாணன்றென் மாறைவெற்ப
துறந்தா ரெனையென்று சோருவ தேனிந்தத் தொல்லுலகிற்
பிறந்தா ரெவர்க்கும் பிரிவெய்து மால்வெய்ய பேரமர்க்கட்
புறந்தாழ் கரிய குழற்செய்ய வாயைய பூங்கொடியே"

எனவும்,

2"மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
யழியல் வாழி தோழி நன்ன
னறுமா கொன்று 3நாட்டிற் போகிய
வொன்றுமொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே"

எனவும் வரும்.

தலைவி முன்னிலைப் புறமொழி மொழிதற்குச் செய்யுள்:

4"பூவலர் வாவியி னீரற்ற போதுற்ற புன்மையல்லாற்
காவலர் காமந் துறக்கிலென் னாங்கடம் பாய்மதுகை
மாவல வாணன் வயற்றஞ்சை வேந்தனை வாழ்த்தல் செய்ய
மேவலர் போலுங் கழற்றுரை யாளர் வியனறிவே"

எனவும்,

5"யாவது மறிகிலா கழறு வோரே
தாயின் முட்டை போலவுட் கிடந்து
சாயி னல்லது பிறிதெவ னுடைத்தோ
யாமைப் பார்ப்பி னன்ன
காமங் காதலர் கையற விடினே"

எனவும் வரும்.

தலைவி பாங்கியொடு பகர்தற்குச் செய்யுள்:

6"முலையார் முயக்கினு மல்லா விடத்தினு மூரிமுந்நீ
ரலையா ரமுதமு நஞ்சமும் போல வணங்கனையாய்



1. த. கோ. செ: 145.

2. குறு. செ: 73.

3. 'ஞாட்பிற் போக்கிய' என்றும்பாடம்.

4. த. கோ. செ: 146.

5. குறு. செ: 152.