தொலையாத வின்பமுந் துன்பமுங் காட்டுவர் தூங்கருவி மலையா சலத்தமிழ் தேர்வாணன் மாறைநம் மன்னவரே" எனவும், 1"நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சி கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங் கினிய செய்தநங் காதல ரின்னா செய்த னோமென் னெஞ்சே" எனவும், 2"என்கைக் கொண்டு தன்க ணொற்றியுந் தன்கைக் கொண்டென் னன்னுத னீவியும் அன்னை போல வினிய கூறியுங் கள்வர் போலக் கொடியன் மாதோ 3மணியோ டிழிதரு மருவி பொன்னென வேங்கை தாய வோங்குமலை யடுக்கத் தாடுகழை நிவந்த பைங்கண் மூங்கி லோடுமழை கிழிக்குஞ் சென்னிக் கோடுயர் பிறங்கன் மலைகிழ வோனே" எனவும், 4"அசுணங் கொல்பவர் 5கையே போன்று மின்பமுந் துன்பமு முடைத்தே தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே" எனவும் வரும். தலைவியைப் பாங்கி அச்சுறுத்தற்குச் செய்யுள்: 6"பேணற் கரியநின் பெண்மையு நாணமும் பேணியவர் காணத் தகுமென்று காண்பதல் லாற்கழி காதனெஞ்சு பூணத் தருகினும் பொற்பல்ல வாகுதல் கற்பல்லவால் யாணர்த் தமிழுடையான்வாணன் மாறையி னின்னமுதே" எனவும்,
1. குறு. செ: 202.
2. நற்றிணை, செ: 28. (பாடம்) 3. 'மணியென விழிதரும்' 4. நற்றிணை, செ: 304. (பாடம்) 5. 'கைபோ னன்று'. 6. த. கோ. செ: 148.
|