136

1"மனங்கா வலருழை வைத்துமென் கூர்வளை வாய்ப்பசும்பு
ளினங்காவன் மாற்றிய வேனல்கண் டாலன்னை யெப்படியுங்
கனங்காவல் கொண்ட கழையிருஞ் சாரற் கனங்குழைநின்
புனங்காவன் மாற்று மதன்யின்னர்க் காவலும் பூணும் வந்தே"

எனவும்,

2"மெய்யிற் றீரா மேவரு காமமோ
டெய்யா யாயினு முரைப்ப றோழி
கொய்யா முன்னுங் குரல்வார்பு தினையே
அருவி ஆன்ற பைங்கா றோறு
மிருவி தோன்றின பலவே நீயே
முருகுமுரண் கொள்ளுந் தேம்பாய் கண்ணிப்
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலோ டமைந்தனை யாழநின்
பூக்கெழு தொடலை நுடங்க வெழுந்து
கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி
யாங்காங் கொழுகா யாயி னன்னை
கிறுகிளி கடித றேற்றா ளிவளெனப்
பிறர்த்தந்து நிறுக்குவ ளாயி
னுறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே"

எனவும் வரும்.

நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கற்குச் செய்யுள்:

3"குன்றா கியபொன்னும் வேழக் குழாமுங் கொடைபுகழ்ந்து
சென்றார் முகக்குஞ் செழுந்தஞ்சை வாணன்றென் மாறைவெற்பி
னன்றா மிறைவற்கு நன்றியி லேற்குமந் நான்முகத்தோ
னொன்றா விதித்தில னேயுயிர் போல வுடம்பையுமே"

தலைவிக்கு அவன்வரல் பாங்கி சாற்றற்குச் செய்யுள்:

4"நெஞ்சுக வாய்மல ரன்னகண் ணீர்மல்க நின்றவஞ்சொற்
கிஞ்சுக வாய்வஞ்சி கேட்டரு ணீயுங் கிளைத்தமிழோர்
தஞ்சுக வாய்மொழி நெஞ்சுடையான் றஞ்சை வாணன்வெற்பின்
மஞ்சுக வார்த்தன வாவலர் தேரின் மணிக் குரலே"

எனவும்,


1. இலக். வி. அகத் :140 ஆம் சூ. உரை மேற்கோள்.

2. அகம், செ: 28.

3. த. கோ. செ: 149.

4. த. கோ. செ: 150.