1"கவர்பரி நெடுந்தேர் மணியு மிசைக்கும் பெயர்பட +விளங்கிய விளைஞரு மொலிப்பர் கடலாடு வியலிடைப் பேரணிப் பொலிந்த திதலை யல்குல் நலம்பா ராட்டிய வருமே தோழி வார்மணற் சேர்ப்ப 2னிற்பட வாங்கிய முழவுமுதற் புன்னை மாவரை மறைகம் வம்மதி பானாட் பூவிரி கானற் புணர்குறி வந்துநம் மெல்லிணர் நறும்பொழிற் காணாதவ னல்ல லரும்படர் காண்கநாஞ் சிறிதே" எனவும் வரும். தோழி சிறைப்புறமாகத் தலைமகற்குச் செறிப்பறிவுறுத்தற்குச் செய்யுள்: 3"தொடைக்கணி யார்தடந்தோளவர் கேளலர் தோகையன்னா ருடைக்கணி யாந்தழை கொய்யா ருழவ ருடைத்ததெண்ணீர் மடைக்கணி யார மிடுந்தஞ்சை வாணன் வரையின் முன்போற் கடைக்கணி யார்கணி யார்நம்மை நாளைக் கருங்கணியே" எனவும், 4"வினைவிளையச் செல்வம் விளைவதுபோ னீடாப் பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித்-தினைவிளைய மையார் தடங்கண் மயிலன்னாய் தீத்தீண்டு கையார் பிரிவித்தல் காண்" எனவும் வரும். தோழி தலைமகற்கு முன்னிலைப்புறமொழி மொழிந்து இற்செறிப்புணர்த்தற்குச் செய்யுள்: 5"பயில்காள பந்திப்புயலன்ன வோதியைப் பைங்கிள்ளைகாண் மயில்காள் சிறிது மறக்கப்பெ றீர்தஞ்சை வாணன்வெற்பிற் குயில்காள மெங்கு மியம்புதண் சோலையிற் கூடியின்ப மயில்காள வெங்கதிர் வேலன்பர் சால வயர்ப்பினுமே" எனவும்,
1. நற்றிணை, செ: 307.
(பாடம்) 2. 'இயங்கிய இனையரும்,' (பாடம்) 3. னிழல்பட 4. த. கோ. செ: 151. 5. திணைமாலை நூற்: 5. 6. த. கோ. செ: 152.
|